இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 – 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை இன்று ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாற தெரிவித்தார்.
அங்குதொடர்ந்தும் கூறுகையில் ,
வடக்கும் கிழக்குமாகு 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்த்தினால் எவ்வித அபிவிருத்தியும் இன்றி காணப்பட்ட பிரதேசங்களாகும். எனினும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் என்ற ரீதியில் காங்கேசன்துறை விமான நிலைய வேலைத்திட்டம், இந்த பிரதேசங்களில் உள்ள படகுகளுக்கு அனுமதி பெறுவதற்கு அவற்றை கொழும்புக்கு கொண்டு வர வேண்டிய நிலைமை காணப்பட்டது.
எனினும் இந்த பிரதேசங்களிலேயே அவற்றை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தமை மற்றும் கிராமங்களுக்கூடான வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் என்பவற்றை முன்னெடுத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.
வடக்கின் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இங்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கடப்பாடு கிடையாது. அத்தோடு பெற்றோலிய வளங்கள் அமைச்சர் என்ற அடிப்படையில் திருகோணமலைக்கு 16 எரிபொருளட தாங்கிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.
புகையிரத்தின் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு எரிபொருள் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டது. வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்த விமான நிலையம் மிக முக்கிய இடத்தை வகித்தது. 2015 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாகியதிருந்து இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வந்தது. எனினும் கடந்த 6 மாத காலத்திற்குள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வேலைத்திட்டத்தை பொறுப்பில் எடுத்ததோடு, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தார்.
அத்தோடு ஒவ்வொரு வாரமும் இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதோடு, அடுத்த மாதத்திற்குள் இந்தவேலைத்திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டும் என்றும் பிரதமர் எமக்கு பணிப்புரைவிடுத்துள்ளார்.