காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்திற்கு ஆசி வேண்டி பூஜை வழிபாடும், கவனயீர்ப்பு போராட்டமும் மலையக தன்னெழுச்சி இளைஞர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது நோர்வூட் சின்ன எலிபடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்த ஒரு தீர்க்கமான முடிவையும் அவர்களின் உறவினர்களுக்கு வழங்கவில்லை. எனவே ...
Read More »செய்திமுரசு
தமிழ்க் குடும்பம் நாடு கடத்தல் ; அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்!
ஒரு தமிழ் குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்த அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் இன்று அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள நகரங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் பிறந்த 4 மற்றும் 2 வயதுடைய இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களே கடந்த அண்மையில் இலங்கை செல்லும் விமானத்தில் ஏற்றப்பட்டு வலுக்கட்டாயமாக நாடுகடத்த அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் பின்னர் விமானம் புறப்பட்ட நிலையில் ...
Read More »மாற்று அரசியல் கொள்கை ஒன்றை உருவாக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது!
நாட்டில் சரியான அரசியல் மாற்றம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே இந்த நாட்டின் நிலைமைகளை மாற்றியமைக்க முடியும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க மாற்று அரசியல் கொள்கை ஒன்றினை உருவாக்கும் திட்டம் எம்மிடம் உள்ளது என்றும் கூறினார். மக்கள் விடுதலை முன்னணியின் அமைப்பாளர்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த நாட்டில் சரியான அரசியல் மாற்றம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக மட்டுமே இந்த நாட்டின் நிலைமைகளை மாற்றியமைக்க முடியும். எம்மால் மட்டுமே இந்த நாட்டுக்கு ...
Read More »தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்!
தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தெலுங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக பகத் சிங் கோஷ்பார் நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோல், ...
Read More »காஷ்மீரும் வட அயர்லாந்தும் எங்கே ஒன்றுபடுகின்றன ? எங்கே வேறுபடுகின்றன ?
ஜூலை நடுப்பகுதியில் ஒரு நாள் பெல்பாஃஸ்டில் இருந்து டப்ளினுக்கு பஸ்ஸில் பயணம் செய்தேன். பெல்பாஃஸ்ட் வட அயர்லாந்தில் இருக்கிறது ; மதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தினால் பளவுபடுத்தப்பட்ட தீவின் ஒரு பகுதியான அயர்லாந்து குடியரசில் டப்ளின் இருக்கிறது.ஆனால், சோதனை நிலையம் எதுவும் இருக்கவில்லை ; வீதி அறிவிப்புகளில் மைல்கள் கிலோமீட்டர்களாக மாறியபோது, விளம்பர பதாகைகளில் விலைகள் பவுண்களில் இருந்து யூரோவாக மாறியபோது, எழுத்துக்களில் அசையழுத்தக்குறியைக் கண்டபோது எல்லையைக் கடந்துவிட்டேன் என்பதை புயிந்துகொண்டேன். இன்னொரு நாட்டில் நான் இருப்பதை எனது கையடக்க தொலைபேசி காட்டியது. ...
Read More »கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரியா குடும்பம்!
மெல்பேர்னில் சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களான நடேசலிங்கம்-பிரியா குடும்பத்தை இலங்கைக்கு நாடுகடத்தும் நடவடிக்கை கடைசிநேரத்தில் தடுக்கப்பட்டு டார்வினில் தங்கவைக்கப்பட்டிருந்தநிலையில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். நேற்று இரவிலிருந்து குறித்த குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தற்போது தெரியவந்துள்ளதாகவும் பிரியா குடும்பத்தின் நாடுகடத்தலை தடுப்பதற்காக போராடும் home to Bilo குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. நடேசலிங்கம்-பிரியா குடும்பம் தம்மை ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு ...
Read More »தமிழ்க்குடும்பத்திற்கு ஆதரவாக தேசிய அளவில் கவனயீர்ப்பு நிகழ்வு!
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்த தமிழ்க்குடும்பத்தின் அகதிக்கோரிக்கையை நிராகரித்து சிறிலங்காவுக்கு நாடுகடத்த வெளியேற்ற முற்பட்டபோது நீதிமன்றத்தின் ஊடாக எதிர்வரும் புதன்கிழமை வரை தடுக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ச்சியாக துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் இக்குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று மீளவும் சுதந்திரமாக வாழவிடுமாறு கோரி அவுஸ்திரேலியாவின் பெருநகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன. 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தனித்தனியே வெவ்வேறு படகுகளில் அவுஸ்திரேலியா வந்த பிரியா மற்றும் நடேஸ் ஆகியோர் தமது அகதி தஞ்சகோரிக்கையை முன்வைத்த சமூகத்தில் வாழ்ந்துவந்த நிலையில் திருமணமாகி குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வாழ்ந்துவந்தனர். இவர்களுக்கு தற்போது இரண்டு மற்றும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவி பலி!
அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 20 வயதான நிசாலி பெரேரா என்ற மாணவியே உயிரிழந்துள்ளதாக Monash பல்கலைக்கழக நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கறுப்பு நிறத்திலான வாகனம் ஒன்றே மாணவி மீது மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியிலுள்ள கண்காணிப்பு கமராவின் உதவியுடன் விபத்தை ஏற்படுத்திய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இது தொடர்பில் காவல் துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து ...
Read More »தொடாவிடினும் சுடும் அமேசன் தீ !
இந்தப் பூமி தனி ஒருவருக்கு சொந்தமானது அல்ல. மற்றும் மனிதன் என்ற ஓர் உயிரினம் மட்டும் வாழ்வதற்கானதும் அல்ல. இது எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கும் உரியது. மனிதன் எப்படி நீரை, காற்றை, நிலத்தை அனுபவிக்கிறானோ அதே உரிமை சிங்கத்துக்கும் சிட்டுக்குருவிக்கும் ஏன் கண்களுக்குப் புலப்படாத சிறு புழுவுக்கும் உள்ளது. இயற்கையின் படைப்பு எல்லோருக்குமானதே. ஆனால் மனிதன்மையை அழித்துவிட்டு மனிதன் என்ற உடலுக்குள் இருக்கும் பேராசை கொண்ட கொடூரமான பெருவிலங்குகள் இயற்கையின் கொடைகளை அழித்து அத்தனையையும் வெறும் பணமாக்க முனைகின்றன. இந்தப் பேராசையின் விளைவுகள் உலகில் ...
Read More »இந்தியாவும் பாக்கிஸ்தானும் யுத்தத்தை நோக்கி நகர்கின்றன!
இந்தியாவும் பாக்கிஸ்தானும் நேரடியான யுத்தமொன்றை நோக்கி செல்கின்றன என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். நியுயோர்க் டைம்சில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். காஸ்மீர் விவகாரத்தில் சர்வதேசசமூகம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். காஸ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலகம் எடுக்காவிட்டால் முழு உலகிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என எழுதியுள்ள இம்ரான்கான் இரு அணுவாயுத நாடுகளும் நேரடி மோதலை நோக்கி நகர்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணலாம் என ...
Read More »