இந்தியாவும் பாக்கிஸ்தானும் நேரடியான யுத்தமொன்றை நோக்கி செல்கின்றன என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
நியுயோர்க் டைம்சில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
காஸ்மீர் விவகாரத்தில் சர்வதேசசமூகம் தலையிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காஸ்மீரில் இந்தியா மேற்கொள்ளும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலகம் எடுக்காவிட்டால் முழு உலகிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என எழுதியுள்ள இம்ரான்கான் இரு அணுவாயுத நாடுகளும் நேரடி மோதலை நோக்கி நகர்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணலாம் என தெரிவித்துள்ள இம்ரான்கான் எனினும் முதலில் இந்தியா காஸ்மீரை சட்டபூர்வமாக ஆக்கிரமிப்பதை கைவிடவேண்டும் என கோரியுள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலம் காஸ்மீர் மக்களின் தசாப்தகால துயரத்திற்கு தீர்வை காணும் முடிவை எட்டலாம் என தெரிவித்துள்ள இம்ரான் கான் எனினும் இந்தியா காஸ்மீர் ஆக்கிரமிப்பை கைவிட்டு,ஊரடங்கு சட்டத்தினை முடிவிற்கு கொண்டு வந்து தனது படையினரை மீள முகாம்களிற்குள் அனுப்பினால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலை இரண்டாம் உலக யுத்த கால நிலை போல காணப்படுகின்றது என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal