செய்திமுரசு

திருமணம் – இறுதி சடங்கு நடத்துவது குறித்து……..

தற்போது திருமண செய்வதற்கான தினத்தை முன் கூட்டியே  ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் இறுதி சடங்கு எப்படிச் செய்வது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெளிவுப் படுத்தியுள்ளார். பொலிஸ் ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ள பகுதிகள் மற் றும் ஏனைய பகுதிகளில் இடம்பெறவுள்ள திருணம் விழா, விளையாட்டு விழாக்கள், ஏனைய விழாக்கள் பங்கேற் பவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். திருமணம் விழாவின் போது சுகாதார பிரிவில் ஆலோ சனை பெற்று பொலிஸாருக்கு ...

Read More »

சுமந்திரன் இனத்தின் சாபக்கேடு!

அனந்தி சசிதரன் செவ்வி தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகியுள்ள சுமந்திரனுடன் கஜேந்திரகுமார், சுரேஸ்; பிரேமச்சந்திரன், சிறிகாந்தா போன்றவர்கள் எவ்வாறு கூட்டிணைந்து செயற்பட போகின்றார்கள் தமிழ்த் தேசியத்திற்கும், தமிழ் மக்களினதும் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரானவராக இருக்கும் சுமந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஒன்றுபடும் அரசியல் தரப்புக்களின் கலந்துரையாடல்களில் பங்கேற்பது தமிழினத்தின் சாபக்கேடாகும் என்று ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தன் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார் அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- பொதுத்தேர்தலுக்கு பின்னரான சூழலில் தமிழ்த் தரப்புக்கள் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகள் வெற்றிகண்டமை மற்றும் ...

Read More »

சீனாவை எதிர்கொள்ள கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா!

மேற்குபசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை பசுபிக்கிற்கான சக்தி என வர்ணித்துள்ள ரொபேர்ட் ஓ பிரையன் சீனாவின் அறிவிக்கப்படாத ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடிநடவடிக்கை,இந்தோ பசுபிக்கில் உள்ள ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்தும் செயற்பாடுகள் போன்றவை எங்கள் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எங்கள் பசுபிக் அயல்நாடுகளின் இறைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு ...

Read More »

மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கிய சூறா

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லந்து (Queensland) மாநிலத்தில் உள்ள Britomart பவளப்பாறையில் சூறா தாக்குதலுக்கு ஆளான ஆடவர் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். ஈட்டியைக் கொண்டு மீன் பிடிக்கும் நடவடிக்கைக்குப் பிரபலமான அந்தப் பவளப்பாறையில், ஆடவர் இன்று, சிலருடன் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார். சூறா மீன் அவரின் தொடைப்பகுதியைக் கடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. கவலைக்கிடமாக உள்ள ஆடவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

Read More »

அமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனை

அமெரிக்காவில் மீண்டும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி பரிசோதனையை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என எப்.டி.ஏ. முடிவு செய்துள்ளது. கொரோனா வைரசை தடுப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், பன்னாட்டு மருந்து நிறுவனமான அஸ்ட்ரா ஜெனோகாவும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி பரிசோதித்து வருகின்றன. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் மருத்துவ பரிசோதனையை அமெரிக்கா கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து நிறுத்தி வைத்துள்ளது. இந்த தடுப்பூசியை மீண்டும் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனையை தொடர அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் (எப்.டி.ஏ.) நேற்று ...

Read More »

மோசமடையும் கொழும்பின் நிலை!

கொரோனா நிலைமை மோசமடைவதால், கொழும்பு மாவட்டத்தில் கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெலிக்கடையைில் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6.00 மணிமுதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

Read More »

யாழில் நேற்று 445 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆல் அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள் மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களை போல யாழில் தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்” எனக் கூறியிருக்கின்றார் யாழ். அரசாங்க அதிபர் க.மகேசன். தற்போதைய யாழ் மாவட்ட கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்க யாழ் மாவட்டஅதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது; “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோணா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ...

Read More »

ஆஸ்திரேலிய அரசின் உத்தரவு: நிர்கதி நிலையில் அகதிகள்

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதைத் போல ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவது முடங்கிக் கிடந்த ஆஸ்திரேலிய மக்களிடையே மகிழ்வை ஏற்படுத்தி வருகின்றது. அதே வேளை, இந்த காலக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் உள்ள அகதிகளை நிர்கதி நிலைக்குத் தள்ளியிருக்கின்றது. இந்த பெருந்தொற்று சூழலில் சொந்த நாட்டு மக்களே அல்லாடி வரும் நிலையில், ஆஸ்திரேலியாவின் சமூகத் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அகதிகள் அங்கிருந்து ...

Read More »

20ஆவது திருத்தத்துக்கு பின்னரான நாடு

20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டு விட்டது. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இனியும் ராஜபக்சக்கள் தங்களுடைய வெற்றி தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி என்று மார்தட்டிக் கொண்டிருக்க முடியாது. அது  முன்னரும்  தனிச் சிங்கள வாக்குகளால் பெற்ற வெற்றி அல்ல. ஜனாதிபதி தேர்தலின் போதும் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் வாக்குகளையும் சேர்த்தே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுடைய தமிழ் முகவர்கள் இல்லையென்றால் 150 ஆசனங்கள் கிடைத்திருக்காது. எனவே இருபதாவது திருத்தத்துக்கு முன்னரும்  அவர்கள் பெற்ற மூன்றிலிரண்டு பெரும்பான்மை தனிச்சிங்கள வாக்குகளால் பெற்ற ...

Read More »

’20’ ஐ ஆதரித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 20ஆவது திருத்தத்திற்கு எதிராக உரையாற்றியும், வாக்களித்தும் இருக்கத்தக்கதாக, கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தை தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது இல்லத்திற்கு வரவழைத்து, வெள்ளிக்கிழமை செயலாளர் நிசாம் காரியப்பரின் பங்குபற்றுதலுடன் கூட்டமொன்றை நடத்தினார். அரசியலமைப்பின் 20ஆவது ...

Read More »