அவுஸ்திரேலியாவை சேர்ந்த காதலி ஒருவர் புற்றுநோயால் இறந்துபோன தனது காதலனின் விந்தணுவை நீதிமன்றத்தின் உதவியுடன் போராடி வாங்கியுள்ளார். Ayla Creswell மற்றும் Joshua Davies ஆகிய இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்தபோது விதி இவர்களது வாழ்க்கையில் விளையாடியது. துரதிஷ்டவசமாக Joshua Davies க்கு புற்றுநோய் ஏற்பட்டதையடுத்து அவர் இறந்துபோனார். ஆனால் இவர் இறந்துபோவதற்கு முன்னர் இவரது விந்தணுக்கள் பர்க்கிம்ஹாமில் உள்ள Human Fertilisation and Embryology Authority (HFEA) ...
Read More »செய்திமுரசு
விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்!
விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் ...
Read More »பாகிஸ்தான் சிறையில் சலுகைகளை மறுத்தார் நவாஸின் மகள்!
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீபின் மகள் மரியம் சிறப்பு சலுகைகளை மறுத்துள்ளார். லண்டனில் சட்டவிரோதமாக வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டு கள் சிறை தண்டனையும் அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள் சிறைதண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த இருவரும் கடந்த 13-ம் திகதி பாகிஸ்தான் திரும்பினர். லாகூர் விமான நிலையத்தில் அவர்களை போலீஸார் கைது செய்து ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைத்தனர். சிறையில் சிறப்பு வசதிகளை கோரி நவாஸ் ஷெரீப் ...
Read More »டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராயும் விசேட அமர்வில் முதலமைச்சர் கொள்ளவில்லை!
வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபையின் இன்றைய சிறப்பு அமர்வில் முதலமைச்சர் உட்பட ஏனைய 5 அமைச்சர்களும் கலந்து கொள்ளவில்லை. வட மாகாண சபையின் 127 வது அமர்வின் விசேட அமர்வு இன்று யாழ். கைதடியில் உள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. கடந்த யூலை 10ம் திகதி வடக்கு மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் ...
Read More »வடக்கு, கிழக்கில் இராணுவ முகாங்களை அகற்ற முடியாது!-இராணுவத் தளபதி
வடக்கு, கிழக்கில் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என இராணுவத் தளபதி மஹேஸ் சேனநாயக்கத் தெரிவித்துள்ளார். நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் சில பணிகள் தொடர்பிலும் அரசியல்வாதிகளாலும், ஊடகங்களிலும் பிழையான செய்திகள் வெளியிடப்படுவதாகவும், இதனால் நாட்டு மக்கள் மத்தியில், இராணுவம் தொடர்பிலான தவரான அபிப்ராயம் ஏற்படுவதாகவும் அவர் ஊடகங்ளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். “யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் இராணுவம் நிர்வாகக் கடமைகளுக்கு அப்பால் பல்வேறு அபிவிருத்தி மற்றும் சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளது. பிரதானமாக நிர்வாக கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினர்களை அகற்றி அவர்களை வேறு கடமைகளுக்காக ...
Read More »தமிழ் இளைஞர் சிட்னியிலிருந்து நாளை நாடுகடத்தல்! எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்!!
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து தமிழ்க்குடும்பம் ஒன்றின் தந்தையான தமிழ் இளைஞர் ஒருவர் நாளை திங்கட்கிழமை பலவந்தமாக நாடுகடத்தப்படவுள்ளார். அகதி தஞ்சகோரிக்கையுடன் 2012 இல் அவுஸ்திரேலியா வந்தடைந்த 30 வயதான திலீபன் 2016 இல் இன்னொரு அகதி தஞ்சகோரிக்கையுடன் வந்தடைந்த பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்துவந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு செப்ரம்பரில் மகள் ஒருவர் பிறந்துள்ளார். எனினும் இவ்வாண்டின் ஆரம்பத்தில் விலாவுட் தடுப்புமுகாமுக்கு அழைத்துச்செல்லப்பட்ட திலீபன் இதுநாள் வரை தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். கடந்த கிழமை இவரது மனைவிக்கும் மகளுக்கு ஐந்து வருட தற்காலிக வதிவிடவுரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில், ...
Read More »அவுஸ்திரேலியாவில் பிடிப்பட்ட 600 கிலோ முதலை!
அவுஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள முதலை ஒன்று சுற்றுலாத்தறை அதிகாரிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது.அஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை வந்தது. அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து வந்தது.5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளன.
Read More »அவுஸ்திரேலியாவில் குடியேறிய இந்தியப் பெண்ணின் சோகமுடிவு!
இரண்டு குழந்தைகளின் தாயான சுப்றாஜ் தனது நான்கு மாத குழந்தையுடனுன் மேல்மாடியிலிருந்து குதித்து இறந்தமைக்கு அவரது தனிமை உணர்வு தான் காரணம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. யூலை மாதம் 14 ஆம் திகதி 2016 அன்று நடந்த இச்சம்பவம் பற்றிய விசாரணை முடிவிலேயே நீதிமன்றம் இக்கருத்தை தெரிவித்துள்ளது. பிரசவத்திற்கு பின்னர் ஏற்படும் மனவழுத்தம் காரணமாக இச்சம்பவம் நடைபெற்றது என்றும் இதனை சுகாதார பிரிவு கவனத்திற்கொள்ளவேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார். மனவழுத்தம் தொடர்பான விசாரிப்புகளின்போது அதுபற்றிய கவலைகளை வெளியிட்டிருக்கவில்லை எனவும் நான்கு தடவைகள் அவரது வீட்டிற்கு ...
Read More »”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை”!-டென்னிஸ் தேவதை
விம்பிள்டன் இறுதிப்போட்டி மீண்டும் ஓர் எதிர்பார்ப்பையும் அழுத்தத்தையும் செரினா மீது வைத்திருக்கிறது உலகம். 36 வயதில், குழந்தை பிறந்த பத்து மாதத்தில், 24-வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல களமிறங்குகிறார் டென்னிஸ் தேவதை. ”பிஞ்சுக் கால்களின் முதல் நடையை என்னால் பார்க்க முடியவில்லை. மீண்டும் களத்தில் என்னை நிரூபிப்பதற்காக பயிற்சியில் இருக்கிறேன். மழலையின் நடையைக்கூட பார்க்கமுடியாத தாயாகிவிட்டேன். என்னால் அழாமல் இருக்க முடியவில்லை” – நாளை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பருடன் விளையாட இருக்கும் செரினா வில்லியம்ஸ் பதிவிட்டிருக்கும் வார்த்தைகள்தான் இவை. எப்போதும்போல சறுக்கித்தள்ளவைக்கும் நெகட்டிவ் கமென்ட்டுகள் வந்தாலும், work – life பேலன்ஸுக்காக உழைக்கும்… உழைத்துக்கொண்டேயிருக்கும் ...
Read More »அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக காத்திருக்க வேண்டிய காலம்….!
அவுஸ்திரேலியாவில் குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள ஒருவர் காத்திருக்க வேண்டிய காலம் அதிகரித்துச் செல்கிறது. இதுகுறித்து குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆலன் டட்ஜ் (Alan Tudge) விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்; குடியுரிமை கோரியவர்களின் விண்ணப்பங்கள் தற்போது 14-17 மாதத்திற்குள் பரிசீலிக்கப்படுகிறது என கூறியுள்ளார். பரிசீலனை செய்வதற்கு காலதாமதமாவதற்கு சில காரணங்கள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 01. குடியுரிமைக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையானது 2010 முதல் 2018 வரையில் மூன்று மடங்காகியுள்ளது. 02. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் கடுமையான பாதுகாப்பு விதிகளின் ...
Read More »