சூடானில் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல் துறையின் நடவடிக்கைகளால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டதால், ரொட்டி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ரொட்டி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினருடன் இணைந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், கடைகளை சூறையாடி அங்குள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் கொள்ளையடித்துச் செல்வதும் அதிகரித்தது. ...
Read More »செய்திமுரசு
அன்டனோ விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விடுதலைப் புலி உறுப்பினர் இருவருக்கு 185 ஆண்டு கடூழியச் சிறை!
இலங்கை விமானப் படையின் அன்டனோ – 32 ரக விமானத்தின் மீது வில்பத்து வனப்பகுதியில் வைத்து ஏவுகணை செலுத்தியமையால் 37 பேரின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தனர் என்ற குற்றத்துக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் இருவருக்கு 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநூராதபுரம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 185 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையை ஒரே தடவையில் 5 ஆண்டுகளில் சிறையில் அனுபவிக்க முடியும் என்று நீதிபதி தண்டனைத் தீர்ப்பில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லசாமி ...
Read More »ஆஸ்திரேலியாவில் பெண்கள் அரை நிர்வாண போராட்டம்!
சவுதி அரேபிய பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் தரக்கோரி ஆஸ்திரேலியாவில் 4 பெண்கள் மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்கள். சவுதி அரேபியாவை சேர்ந்த இளம்பெண் ரஹப் முகமது அல்கியூனன் (18). கருத்து வேறுபாடு காரணமாக தன்னை அறையில் அடைத்து வைத்து பெற்றோர் கொடுமைப்படுத்தியதாக கூறி நாட்டை விட்டு வெளியேறினார். குவைத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டார். ஆனால் அவரிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாததால் தாய்லாந்து அதிகாரிகள் அங்கு தடுத்து நிறுத்தினர். சவுதிஅரேபியாவுக்கே அவரை திருப்பி அனுப்ப ...
Read More »மொழியோடு புரிந்த போர்!
தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியினால் 1964ஆம் ஆண்டு இந்தியாவின் புதுடில்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகில் உள்ள தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி, தமிழை வளர்க்கவும் வளம்படுத்தவும் தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த திட்டமிட்டது. 26ஆவது சர்வதேச உலகக் கீழைத்தேயக் கல்வி மாநாட்டின்போதே இதற்கான முயற்சிகள் இடம்பெற்றன. தனிநாயகம் அடிகளாரும், வ.ஐ. சுப்பிரமணியமும் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுத்தனர். 1964 ஜனவரி ஏழாம் திகதி உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் முதல் சந்திப்பு டில்லியில் இடம்பெற்றது. முதலாவது ...
Read More »அவுஸ்திரேலியாவில் அகதிகள் தடுப்பு முகாமில் போராட்டம்!
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் தடுப்பில் உள்ள நூற்றுக்கணக்கானவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி இருப்பதாகவும், அத்தோடு அதிகாரிகள் தம்மை கைதிகள் போன்று நடாத்துகின்றனர் என்றும் போராட்டக்காரர்கள் கூறியுள்ளதாக தெரிவருகிறது. மெல்பேர்னில் இருந்த தடுப்பு முகாம் (MIDC) சமீபத்தில் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மெல்பேர்ன் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாம் எனப்படும் Melbourne Immigration Transit Accommodation நிலையத்துக்கு அங்கிருந்த அகதிகள் கொண்டு செல்லப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே மேற்குறித்த கோரிக்கைகளை முன்வைத்து உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் சுமார் ...
Read More »வடக்கு ஆளுநர் கிளிநொச்சி விஜயம்!
புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று (10-01-2019) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர். நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். இதில் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ...
Read More »எல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம்! கூட்டத்தில் இருந்து வெளியேறிய டிரம்ப்!
மெக்சிகோ எல்லைப்பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் விவகாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் இருந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆவேசமாக வெளியேறினார். அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் (570 கோடி டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க நாடாளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார். அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் ...
Read More »அமெரிக்கா செல்லவுள்ளார் மங்கள சமரவீர!
நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக தவணை அடிப்படையில் கடனை கொடுக்க தீர்மானித்த நிலையில் குறித்த கடன் வழங்குவதை தீடீரென சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி விட்டதால் இது தொடர்காப கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நிதி அமைச்சரின் செயலாளர் ஆர்.எம்.எச். சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் நிதியமைச்சருடன் அமெரிக்கா செல்லவுள்ளனர். ...
Read More »அவுஸ்திரேலியா மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா 2019
வங்கக்கடலில் வீரகாவியமாகிய மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் தமிழர் விளையாட்டுவிழா இவ்வாண்டும் அவுஸ்திரேலியா- மெல்பேர்ணில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கடந்த 06 -01 – 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு வேர்வூட் கிழக்குப் பகுதியில் உள்ள பிரதான திறந்தவெளி மைதானத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில் அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை செயற்பாட்டாளர் செல்வன் சஞ்சீவன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை மாவீரர் லெப் கேணல் சதன் அவர்களின் மகன் செல்வன் பவித்திரன் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து கேணல் கிட்டு உட்பட ...
Read More »ஜனநாயக அரசியலில் வெற்றிக்கனியைப் பறிப்பாரா சுமந்திரன்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்துக்கு முன்னர், ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு, விடுதலைப் புலிகள் தடையாக இருந்தனர் என, கடந்த டிசெம்பர் (2018) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பேச்சாளருமான சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்து உள்ளார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது, ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் புலிகளினதும் தேவைப்பாடுகள் ஒரு நேர்கோட்டில் சந்தித்தன. அதனால்தான், ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய, புலிகள் அனுமதித்தனர்” என, அவர் மேலும் தெரிவித்து உள்ளார். சற்றே, 70 ஆண்டுகள் ...
Read More »