புதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவர் இன்று (10-01-2019) வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.
நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். இதில் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனும் ஆளுநரின் இந்த கிளிநொச்சி விஜயத்தில் உடனிருந்தார்.
Eelamurasu Australia Online News Portal