நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நாளை வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக தவணை அடிப்படையில் கடனை கொடுக்க தீர்மானித்த நிலையில் குறித்த கடன் வழங்குவதை தீடீரென சர்வதேச நாணய நிதியம் நிறுத்தி விட்டதால் இது தொடர்காப கலந்துறையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
நிதி அமைச்சரின் செயலாளர் ஆர்.எம்.எச். சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோர் நிதியமைச்சருடன் அமெரிக்கா செல்லவுள்ளனர்.
இதன்போது சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
கடந்த காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட அரசியில் குழப்பங்கள் காரணமாக அமெரிக்கா கடன் வழங்கும் காலத்தை தவணை அடிப்படையில் வழங்குவதாக கூறிய நிலையில் தற்போது அது நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கிக்கு, இந்திய மத்திய வங்கி 400 கோடி அமெரிக்கா டொலரை கடனாக வழங்க இணங்கியுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டின் இருப்புக்களை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கி, இந்திய மத்திய வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் குறித்த தொகையை இந்திய மத்திய வங்கி வழங்க தீர்மானித்துள்ளது.
இது தவிர இன்னும் அமெரிக்க டொலர் பில்லியன் தொகையை பெற்றுக்கொள்ள இந்திய மத்திய வங்கியோடு இரு வழி பரிமாற்றம் மூலம் கையொப்பம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal