செய்திமுரசு

இலங்கையில் உலக பயங்கரவாத்தை ஒழிக்க அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு வழங்கும்!

உலக பயங்கரவாத்தை இலங்கையில் இருந்து முழுமையாக ஒழிக்க அவுஸ்திரேலிய அரசாங்கம்  முழு ஒத்துழைப்பை வழங்கும் என அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் உறுதியளித்துள்ளார். அத்துடன் சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அவுஸ்திரேலியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறும்  அழைப்பு விடுத்தார். அவுஸ்திரேலிய  உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கும்  சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன் போதே மேற்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மீண்டும் நாட்டை வழமைக்கு திருப்பவும்  உலக பயங்கரவாத்தை  இல்லாதொழிப்பதற்கும்  தேவையான  ...

Read More »

பேரினவாதம் விரித்த வலையில் சிறுபான்மை இனங்கள் சிக்கிக் கொண்டன!

அன்று தைப்பொங்கல் திருநாள். கவிதாவின் வீட்டுக்கு, அவளின் நண்பர்களான அன்வரும் மேரியும் தமது பெற்றோருடன் வந்திருந்தனர். தோழர்களைக் கண்ட கவிதா, வீட்டு வாசல் வரை ஓடி வந்து, அவர்களை அன்புடன் வரவேற்றாள். “வணக்கம்! வாருங்கள் வாருங்கள்” எனக் கவிதா நண்பர்களை வரவேற்றாள். மேரியும் அன்வரும் பொங்கல் வாழ்த்துகளைக் கூறி, அன்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். இது நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான, தமிழ்ப் பாட நூலில், ‘பண்டிகைகள்’ என்ற தலையங்கத்தின் கீழ், உரையாடல் வடிவில் அமைந்த பாடப்பரப்பு ஆகும். எம் உயிரிலும் மேலான தமிழைத் தாய் மொழியாகக் ...

Read More »

சட்டவிரோத குடிவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது!-அவுஸ்திரேலியா

சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான அவுஸ்திரேலியாவின் கொள்கைகள் முன்னரைப் போன்று தற்போதும் கடுமையானதாகவே காணப்படுவதாகவும், படகுகளின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவை வந்தடைவதற்கு இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்றும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் எச்சரித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் தலைமையில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய இல்லத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் அவுஸ்திரேலிய எல்லை விவகாரங்களுக்கு பொறுப்பான கொமாண்டர் மேஜர் ஜெனரல் கிரெய்க் பியுரினியால் கடல் ...

Read More »

தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம்!

நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது கைப்­பற்­றி­விட வேண்டும் ...

Read More »

குற்றங்கள் நிரூபிக்கப்படுமாயின் வழக்குத் தொடரப்படும்!

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கபடுமாயின் அவர்கள் மீது  வழக்குத்தொடரவும் குற்றவாளிகள் இல்லாவிட்டால்  அதற்கான  ஆதாரங்களை  வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். யுத்தக்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதிகள் நாட்டுக்கும் மக்களுக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். ஆனால் வரலாற்றில்  முதல் முறையாக முஸ்லிம் பிரதிநிதிகள்  இல்லாத அமைச்சரவை உருவாகியுள்ளது. ஆகவே குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பனர்களிடம் சென்று வாக்கு மூலத்தை  பெற்று  ஒருமாதத்துக்குள் இறுதி விசாரணை அறிக்கைகளை குற்ற விசாரணை பிரிவு பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த அறிக்கைக்கு அமைவாக  ...

Read More »

கனடாவில் உலகின் மிகப்பெரிய சர்வதேச பெண்கள் மாநாடு !

கனடாவில் பிரிடிஸ் கொலம்பிய வான்கூவாரில் பெண்கள் 2019 மாநாடு அடம்பெற்று வருகின்றது. பெண்கள் மற்றும் சிறுமியர் நல்வாழ்வு, சுகாதாரம் பால்நிலைஈ, சமத்துவம், உரிமை குறித்து இப் பெண்கள் மாநாட்டில் ஆராயப்படுகின்றது 160 நாடுகளை சேர்ந்த 8000 பேர் இதில் பங்கேற்கின்றனர். இந்த பெண்கள் மாநாட்டில் 100000 வரையிலான பார்வையாளர்கள் கலந்துகொள்கின்றனர். கடந்த திங்கட்கிழமை 03ஆம் திகதி ஆரம்பமாண இப் பெண்கள் மாநாடு நாளை (06)  நிறைவடைகின்றது. இப் பெண்கள் மாநாட்டில் இலங்கைகை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ...

Read More »

சாஹ்ரானுடன் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு !

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீது சஹ்ரானுடன்  நெருக்கிய  தொடர்புகளை வைத்துள்ளார் எனக் கூறி காத்தான்குடி காவல் துறை  நிலையத்தில் இன்று முறைப்பாடு ஒன்று செய்யப் பட்டுள்ளது.   குறித்த முறைப்பாட்டினை ஈரோஸ் இயக்கத்தின்  தலைவர் ஆர் .பிரபாகரன் இன்று காலை காத்தான்குடி காவல் துறை  நிலையத்தில் பதிவு செய்துள்ளார் . குறித்த முறைப்பாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா தற்கொலை  குண்டுதாரி சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் எனவும், அது குறித்த  படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுவதாகவும் இது ...

Read More »

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு! நால்வர் பலி!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   அவுஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஐரோப்பியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இது தீவிரவாத தாக்குதல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

கேரள ஐஎஸ் தலைவர் ஆப்கானிஸ்தானில் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில், கேரளாவைச் சேர்ந்த ஐஎஸ் பிரிவு தலைவர் ரஷீத் அப்துல்லா உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் திரிக்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஷித் அப்துல்லா. இவர் கடந்த 2016ம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கோட்டையான ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தனது மனைவி ஆயிஷா உள்ளிட்ட 21 பேருடன் குடிபெயர்ந்தார். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அப்துல்லாவின் சமூக வலைத்தளம் மூலமாக தகவலைப் பெற்ற ஒருவர் இத்தகவலை கூறியிருக்கிறார். ...

Read More »

நேச­ம­ணியும், நரேந்­திர மோடியும்..!

புறக்­க­ணித்தல் வலி தரும். ஒரு­வரை முற்­று­மு­ழு­தாக விரும்­பா­தி­ருத்­தலை விடவும் அவரை வேறு­ப­டுத்திப் பார்ப்­பதும், புறக்­க­ணிப்­பதும் ஆகக்­கூ­டு­த­லான சேதத்தை ஏற்­ப­டுத்தும் என்பார், எழுத்­தாளர் ஜே.கே.ரோவ்லிங்ஸ். உலகின் மிகப்­பெ­ரிய ஜன­நா­யக தேசத்தில், வடக்­கத்­தி­யர்­களால் நீண்­ட­கா­ல­மாக மத­ரா­ஸிகள் என்று புறக்­க­ணிக்­கப்­பட்டு வேறு­ப­டுத்­தப்­பட்ட தமி­ழர்கள். இந்த மக்கள் புறக்­க­ணிப்பை புறக்­க­ணித்­தி­ருப்­பதன் மூலம் அர­சியல் ரீதி­யான பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றார்கள். லோக் சபா தேர்­தலில் வாக்­குகள் மூலம் பார­திய ஜனதா கட்­சியை நிரா­க­ரித்­ததன் மூலம் ஜன­நா­யக ரீதியில் பதி­லடி கொடுத்த தமி­ழர்கள், சர்­வ­தேச தகவல் வலைப்­பின்­னலில் நேச­மணி மீதான நேசிப்பின் மூலம் நரேந்­திர ...

Read More »