ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய காட்சியையோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ ஆதரிக்க போவதில்லை என்று கூறியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிறந்த ஒரு வேட்பாளருக்கே எனது வாக்கினை பதிவு செய்ய போவதாக குறிப்பிட்டார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்று 25 வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு அவரை பாராட்டுவதற்கு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வதற்கான சுதந்திர காட்சியின் மூலம் கலந்துரையாடல் ஒன்று கிராண்ட் ஓரியன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது அதனை தொடர்ந்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் ...
Read More »செய்திமுரசு
வெள்ளை மாளிகையில் பிரபல நாளிதழ்களுக்கு தடை!
அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் நாளிதழ்களை தவிர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் கொள்கை முடிவுகள் தொடர்பாக விமர்சிக்கும் நாளிதழ்கள் மற்றும் பத்திரிகைகள் மீது டொனால்ட் டிரம்ப் சமீபக்காலமாக சீற்றத்துடன் கண்டனக் கனைகளை தொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், அந்நாட்டின் பிரபல நாளிதழ்களான வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் ஆகியவற்றுக்கான சந்தா தொகையை நிறுத்துமாறு டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த டிரம்ப், இந்த இரு நாளிதழ்களும் போலியான செய்திகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டி வந்தார். ...
Read More »மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல் – அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள மாவீரர்நாள் நிகழ்வு பற்றிய அறிவித்தலை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வழமைபோல, இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வை சிறப்பாக நினைவுகூருவதற்கான ஏற்பாடுகள் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அறிவித்தலின் முழுவடிவம் வருமாறு: மாவீரர் நாள் நிகழ்வு அறிவித்தல் அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே, தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2019ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் ...
Read More »ஆஸ்திரேலியா தீர்ப்பாயம் முன் குவியும் அகதிகளின் விண்ணப்பங்கள்!
அகதிகளின் தஞ்சக்கோரிக்கை மற்றும் குடியேறிகளின் விசா விண்ணப்பங்கள் தொடர்பான ஆஸ்திரேலிய அரசின் முடிவை மறுபரிசீலணை செய்யக்கோரி குவியும் விண்ணப்பங்கள் பெரும் அளவில் உயர்ந்துள்ளது. “இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது,” என செனட் முன்பு தெரிவித்துள்ளார் நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் பதிவாளரான சியன் லேதெம். இதனால், விண்ணப்பங்கள் தொடர்பாக தீர்ப்பாயம் முடிவெடுப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளது. “விண்ணப்பங்களின் எண்ணிக்கை உயர்வதால், 2017-18ல் 77 சதவீதமாக இருந்த முடிவெடுக்கும் விகிதம ...
Read More »குற்றவாளிகளை நாடு கடத்தும் சட்டமூலத்தை திரும்பப் பெற்ற ஹொங்கொங்!
குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் முழுமையாக திரும்பப் பெற்றுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டில் சீனாவின் ஒரு பகுதியாக்கப்பட்டது. ஆனால், ‘ ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் ‘ என்ற கோட்பாட்டின் கீழ் அது சுயாட்சிப் பிராந்தியமாகவே இருந்தது. 2047 ஆம் ஆண்டில் ஹொங்கொங் முழுமையாக சீனாவுடன் ஒன்றிணைக்கப்படவிருக்கிறது. இந்நிலையில், குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் கொண்டு ...
Read More »ஜனாதிபதியின் தெரிவு தமிழ், முஸ்லிம் வாக்குகளிலேயே தங்கியுள்ளது!
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 35 பேர் போட்டியிடுகின்றனர். ஆயினும் மூன்று பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி அபேட்சகர்களில் ஒருவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார். நான் சென்ற வாரம் எழுதிய கட்டுரையில் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்றும் வெற்றி பெறுவதை எவ்வாறு தீர்மானிப்பது என்பதையும் தெளிவாகக் கூறியிருந்தேன். ஆகவே மீண்டும் அதனைக் குறிப்பிட வேண்டிய தில்லை என நினைக்கிறேன. அக்கட்டுரையைப் படித்தவர்கள் ...
Read More »திருகோணமலை இரகசிய முகாமிற்கு கோத்தாபய பல தடவை சென்றார்!
இலங்கை கடற்படையினரின் பல இரகசிய முகாம்களில் 2008 முதல் 2014 வரை இடம்பெற்ற சித்திரவதைகளில் முக்கிய அதிகாரிகளிற்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு இதன் காரணமாக உலக நாடுகள் இலங்கை கடற்படையுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது புதிய அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கடற்படையினர் தமது சித்திரவதைகளை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பல முகாம்களில் சித்திரவதைகள் ...
Read More »அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில் 13 பேர் கைது!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த இரண்டு பெண்கள் உட்பட 13 பேர் சிலாபம் காவல் துறையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய சிலாபம், சுதுவெல்ல பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் வைத்து இவர்கள் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், பலாலி, மாங்குளம் மற்றும் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது தொடக்கம் 44 வயதுடையவர்கள் ஆவர். ...
Read More »அவுஸ்ரேலியாவில் தஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை!
சிட்னியில் உள்ள Lakemba பகுதியில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட வங்கதேசதஞ்சக்கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 33 வயதான முகமது மோஷின் என்ற அத்தஞ்சக்கோரிக்கையாளர், 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படகு வழியாகதஞ்சமடைந்தவர். இணைப்பு விசாவில் வசித்த இவரின் தஞ்சக்கோரிக்கை அண்மையில் நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பொருளாதார ரீதியாக மோஷின் சிரமப்பட்ட காலத்தில் தன்னுடன் 6 மாதம் வசித்து வந்ததாகக் கூறுகிறார் அவரது நண்பரான முகமது அகமது. “எங்களால் அவருக்கு உதவ முடியவில்லை. ஆனால், அவருக்கு நம்பிக்கை கொடுத்துக்கொண்டே இருந்தோம். ஒரு நாள் உனது நிலையை ஆஸ்திரேலிய ...
Read More »நிராகரிப்பும் நிர்க்கதியும்!
மக்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதே ஜனநாயகம். சாதாரண நிலையில் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த உரித்து, தேர்தல் காலத்தில் இன்னும் அதிக வலிமையைக் கொண்டிருக்கின்றது. தேர்தல் காலத்தில் அதற்கு முன்னுரிமை அளித்து கடைப்பிடிக்க வேண்டும். அதற்கான தேவை அங்கு நிலவுகின்றது. எனவே, அதற்கு இடமளித்துச் செயற்படுவதே தேர்தல் காலத்தின் உண்மையான ஜனநாயக நடவடிக்கையாகும். ஆனால், நீண்ட ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்ற இலங்கையில் அந்த ஜனநாயகப் பண்பு குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக நாட்டின் முக்கிய தேர்தலாகக் கருதப்படுகின்ற ...
Read More »