லங்கை தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடலில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு சுயநிர்ணயத்துடன் கூடிய சமஷ்டி கட்டமைப்பே தீர்வு என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதை பெற்றுக்கொடுக்கும் பாரிய கடப்பாடு பாரத மக்களுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒற்றையாட்சிக்குள் ...
Read More »செய்திமுரசு
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் – இந்திய அணி இன்று அறிவிப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து 20 ஓவர் போட்டிகளை கொண்ட இந்திய அணி வீரர்களின் பெயர் இன்று அறிவிக்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24-ந்தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. வழக்கமான 15 வீரர்கள் பட்டியலுக்கு பதிலாக 16 அல்லது 17 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. 20 ஓவர் அணியை பொறுத்தவரை உலக கோப்பை போட்டிக்கு ...
Read More »காட்டுத்தீ நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டிய மாடல் அழகி!
ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு மாடல் அழகி கெய்லன் வார்டு தனது நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீ, அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 24 பேரை பலி கொண்ட இந்த காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என சுமார் 100 கோடி ...
Read More »மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர்!
பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது ...
Read More »மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு!
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் தெரிவிக்கின்றன. அவ்வித அனுமதிகளைப் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இராணுவத்தினரின் ஆளுகைக்குள் உள்ள பகுதியைத் தனிநபர் ஒருவர் இராணுவத்தினரின் துணையில்லாது இவ்வாறு அபகரிக்க முடியும் குறித்த பகுதியைக் கனரக வாகனம்(ஜே.சி.பி.) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணியில் குறித்த நபர் ஈடுபட்டு வருகிறார் அவர் சுத்தம் செய்யப் பயன்படுத்திய கனரக வாகனம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ...
Read More »ஐ. அமெரிக்கா – ஈரானிய முறுகல்களின் வெற்றியாளர் யார்?
சமகால விடயங்களில் தற்போது அனைவரினது முணுமுணுப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஈரானிடையேயான யுத்தத்தின் எதிர்பார்ப்பே காணப்படுகிறது அதன் விளைவே யாழ்ப்பாணத்தில் பெற்றோல் நிலையங்களில் நேற்று நிலவிய நீண்ட வரிசை முதல் மசகெண்ணை, தங்கம் விலை அதிகரிப்பு, பங்குச்சந்தை வீழ்ச்சி வரை நீள்கிறது. ஆக, இப்போது உலகம் ஒன்றோடு ஒன்றாக தொடர்புபட்டு சுருங்கியுள்ள நிலையில், பெரும்பாலும் குறிப்பிட்ட விடயங்களின் தாக்கங்கள் உலகம் முழுவதும் உணரப்படுபவையாக மாறியுள்ளன. அந்தவகையில், இவ்வாறான குறிப்பிட்ட விடயங்களால் குறிப்பிட்ட தரப்புகளுக்கு கிடைக்கும் அனுகூலங்களே குறித்த விடயங்களுக்கு பின்னால் சதிக் கோட்பாடுகளை கிளப்பி விடுகின்றன. ...
Read More »கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும் விளக்கமறியலில்!
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 12 மாணவர்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குறித்த மோதல் தொடர்பில் கருவாத்தோட்ட ...
Read More »மாணவர்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும்; 15ஆம் திகதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், மஹாபொல புலமைப்பரிசில் நிலுவைப் பணம் எதிர்வரும் வாரத்தில் வழங்கப்படும். அதேபோன்று பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும்; 15ஆம் திகதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்திற்கு சமீபத்தில் ஊர்வலமாக வந்த மாணவ பிரதிநிதிகளுடன் ...
Read More »அரசியல் விளம்பரங்களில் பொய்யை தடுக்க முடியாது!
அரசியல் விளம்பரங்களில் பொய்களை தடுக்க முடியாது. ஆனால் அவற்றை பயனாளர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியும் என முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பேஸ்புக்கில் பதிவிடப்படும் அரசியல் சார்ந்த கருத்துக்கள் மற்றும் விளம்பரங்கள் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல விதமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. விளம்பரங்கள் என்ற பெயரில் பொய்பிரசாரம் செய்வதை தடுக்க முகநூல் நிறுவனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அமெரிக்க பாராளுமன்றம் வலியுறுத்தி உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ...
Read More »ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் தொப்பி ரூ.5 கோடிக்கு ஏலம்!
ஆஸ்திரேலியாவில் பற்றி எறியும் தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னே தன் தொப்பியை ரூ.5 கோடிக்கு ஏலத்தின் மூலம் விற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயால் பலரும் பாதிக்கப்பட்டனர். இந்த காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே, தீயின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிதி வழங்குவதற்காக டெஸ்ட் கிரிக்கெட் ...
Read More »