ஆஸ்திரேலியாவில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நிவாரணத்துக்காக ரசிகர்களுக்கு மாடல் அழகி கெய்லன் வார்டு தனது நிர்வாண படத்தை அனுப்பி ரூ.7 கோடி திரட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீ, அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 24 பேரை பலி கொண்ட இந்த காட்டுத்தீ இன்னும் கட்டுக்குள் அடங்காமல் பற்றி எரிந்து வருகிறது.
இந்த காட்டுத்தீயில் பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன என சுமார் 100 கோடி வன உயிரினங்கள் செத்து மடிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காட்டுத்தீ நிவாரணத்துக்காக அந்த நாட்டு அரசு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் பிரபல ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நன்கொடை வழங்கி உள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கெய்லன் வார்டு என்பவர் ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிவாரணத்துக்காக மிக பெரிய தொகையை நன்கொடையாக வழங்க முடிவு செய்தார். ஆனால் அந்த அளவு தொகை அவரிடம் இல்லாததால் தனது ரசிகர்களிடம் இருந்து வசூலித்து வழங்க தீர்மானித்தார். அதன்படி அவர் தன்னை டுவிட்டரில் பின்தொடரும் 30 ஆயிரம் பேருக்கு ஒரு தகவல் தெரிவித்தார். அதில் 10 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.700) நன்கொடையாக வழங்கும் ஒவ்வொருவருக்கும் தனது நிர்வாண படத்தை தனிப்பட்ட முறையில் அனுப்புவதாக கெய்லன் வார்டு தெரிவித்தார். இதை கேட்டு உற்சாகம் அடைந்த அவரது ரசிகர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர். முதல் நாளிலேயே 5 ஆயிரம் டாலர் (ரூ.3 லட்சத்து 57 ஆயிரம்) வசூல் ஆனது. தற்போது வரை சுமார் 10 லட்சம் டாலர் (ரூ.7 கோடியே 14 லட்சத்து 56 ஆயிரம்) நிதி திரட்டியுள்ளதாக கூறும் கெய்லன் வார்டு, தொடர்ந்து நன்கொடை வந்துகொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal