கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார் என தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் தெரிவிக்கின்றன.
அவ்வித அனுமதிகளைப் பெறாமலும் ஆவணங்கள் இல்லாமலும் இராணுவத்தினரின் ஆளுகைக்குள் உள்ள பகுதியைத் தனிநபர் ஒருவர் இராணுவத்தினரின் துணையில்லாது இவ்வாறு அபகரிக்க முடியும் குறித்த பகுதியைக் கனரக வாகனம்(ஜே.சி.பி.) கொண்டு சுத்தப்படுத்தி வீடு அமைக்கும் பணியில் குறித்த நபர் ஈடுபட்டு வருகிறார் அவர் சுத்தம் செய்யப் பயன்படுத்திய கனரக வாகனம் குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாது அபகரிக்கும் ; பகுதி போரில் வீரமரணமடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை விதைக்கப்பட்ட பகுதி இவற்றைக் கருத்தில் கொண்டு பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் இதற்குத் தீர்க்கமான முடிவினை தருமாறு பணிக்குழு நிர்வாகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
குறித்த விடயம் தொடர்பாக தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு நிர்வாகத்தினர் இராணுவ முகாமுக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பாக வினவிய பொழுது இராணுவத்தினர் தமக்கும் குறித்த அபகரிப்பு இருக்கும் தொடர்பில்லை எனவும் இதனைப் பிரதேச செயலாளர் ஊடாக அணுகுமாறு தெரிவித்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal