நுட்பமுரசு

போலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது. வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது. முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் வானொலி விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் ...

Read More »

அப்பிள் புதிய வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம்!

அப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும். இத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது. கியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் ...

Read More »

ட்விட்களின் மீது புகார் அளிக்க புதிய வசதி அறிமுகம்

ட்விட்டர் சமூக வலைதளத்தில் தவறான ட்விட்களுக்கு புகார் அளிக்க புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் ட்விட்களை தெரிவிக்க புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. தற்சமயம் ட்விட்களை புகார் அளிக்கும் போது புதிய மெனு திறக்கும். இதில் பயனர்கள் ட்விட் பற்றி அதிகளவு விவரங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரச்சனையை விரிவாக புரிந்து கொள்ள முடியும். புதிய வசதியை ட்விட்டர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. பிரச்சனைக்குரிய ட்விட்களை மிகவேகமாக கண்டறிவதற்காக இந்த அம்சம் வழங்கப்படுகிறது. இன்று முதல் பயனர் எதிர்கொள்ளும் ட்விட்கள் ...

Read More »

ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான ஜிமெயிலில் புதிய வசதி அறிமுகம்!

ஜிமெயில் ஆண்ட்ராய்டு செயலியில் ஸ்மாரட் கம்போஸ் அம்சம் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் செயலியில் பல்வேறு மாற்றங்களை சமீபத்தில் மேற்கொண்டிருந்தது. இதில் இன்பாக்ஸ் அம்சத்தில் சில புதிய வசதிகள் இடம்பெற்றிருக்கிறது. புதிய தோற்றம் மட்டுமின்றி ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்ளை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மின்னஞ்சல்களுக்கு வேகமாக பதில் அளிக்க மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. 2018 டெவலப்பர் நிகழ்வில் கூகுள் ஸ்மார்ட் கம்போஸ் வசதியை அறிமுகம் செய்தது. ஜிமெயிலின் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் ...

Read More »

ஸ்லைடிங் ஸ்மார்ட்போன் உருவாக்கும் ஹூவாய்!

இரட்டை செல்ஃபி கேமராக்களை கொண்ட ஸ்லைடிங் ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஹூவாய் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் பல்வேறு நிறுவனங்களும் செவ்வக வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன்களையே சமீப காலங்களில் உருவாக்கி வந்திருக்கின்றன. இதனை சற்று மாற்றிக் கொள்ளும் முயற்சியில் சில ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கியிருக்கின்றன. ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் மாற்றத்தை விரும்பிய நிறுவனங்கள் மோட்டாரைஸ் செய்யப்பட்ட ஸ்லைடர் வடிவமைப்பு, இரட்டை டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட்போன் மற்றும் பன்ச் ஹோல் கேமராக்களுடன் சமீபத்திய ...

Read More »

ஜிமெயில் பாஸ்வேர்டு பாதுகாப்பை மேலும் வலிமையாக்குவது எப்படி?

ஜிமெயில் உள்ளிட்ட கூகுள் சேவைகளில் பாஸ்வேர்டு பாதுகாப்பை மேலும் வலிமையாக்குவது குறித்து கூகுள் அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் இணையப் பயன்பாட்டில் நம்முடைய அந்தரங்கம் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  பெரும்பாலான அனைத்துப் பரிவர்த்தனைகளும் இணையத்திலேயே நடைபெறும் காலகட்டத்தில் இருக்கிறோம். இதில் ஹேக்கர்கள், சைபர் திருடர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து நம்மை, நமது தகவல்களைக் காத்துக்கொள்வது முக்கியமாக உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு முழுப் பாதுகாப்பை அளிக்க வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது.   அந்த வகையில், கூகுள் நிறுவனம் க்ரோம் எக்ஸ்டன்ஷனாக ...

Read More »

எழுத்தாளராக ஆசையா?

எழுத வேண்டும் அல்லது எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், ‘200 வேர்ட்ஸ் ஏ டே’ என்ற தளத்தைக் குறித்துக்கொள்ளலாம். எழுத்தார்வமிக்கவர்களை ஊக்குவிக்கும் தளம் இது. இதைத் தனியே செய்யாமல் எழுத்தார்வமிக்கவர்களுடன் இணைந்து மேற்கொள்ள உதவுகிறது இந்த சேவை. எதைப் பற்றியும் யோசிக்காமல் முதலில் எழுதும் பழக்கத்தை வர வைத்துக்கொண்டால், அதன் பிறகு விரும்பிய வகையில் எழுதலாம் என்பதுதான் இந்தத் தளத்தின் அடிப்படை. இந்தக் கருத்துக்கு இந்த இணையதளம் செயல்வடிவம் கொடுத்திருக்கிறது. இதில் உறுப்பினராகத் தினமும் குறைந்தது 200 சொற்களையாவது எழுத வேண்டும். இந்தத் ...

Read More »

லெஜண்டுகளின் ராகங்கள்!

சரிகம கர்வான் சமீபத்தில் சரிகம கர்வான் மினி என்ற கைக்கு அடக்கமான மியூசிக் பிளேயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இசை ஜாம்பவான்களான எம் எஸ் விஸ்வநாதன், டிகே ராமமூர்த்தி, இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் பிரபலமான 351 தமிழ் பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் புளூடூத், யுஎஸ்பி, எப்எம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன. விலை ரூ.2490. எலெக்ட்ரானிக் கமாண்டர் லாகிடெக் நிறுவனத்தின் புதிய ஹார்மோனி எலைட் யுனிவர்சல் ரிமோட் மூலம் நம்மிடமுள்ள எல்லா எலெக்ட்ரானிக் பொருள்களையும் கட்டுப்படுத்த முடியும். தொடுதிரை வசதி உள்ள இந்த ரிமோட்டுடன் ...

Read More »

மனித முக அமைப்பில் 3டி மாஸ்க்குகள்- ஜப்பான் நிறுவனம் அரிய கண்டுபிடிப்பு!

ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 3டி வடிவமைப்பில் தயாரித்துள்ள மனித முக அமைப்பின் மாஸ்க்குகள், பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஜப்பானில் பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அனைத்தும் 3டி மயமாகி காணப்படுகிறது. இந்நிலையில், மனித முக வடிவமைப்பை சற்றும் மாறாத வகையில் ஜப்பானைச் சேர்ந்த ரியல்-எப் என்ற நிறுவனம் 3டி மாஸ்க்குகளை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இந்த செயற்கை மாஸ்க்குகள் குறித்து ரியல்-எப்  நிறுவனத்தின் உரிமையாளர் ஒசாமு கிட்டகாவா கூறியதாவது: இதுவரை ...

Read More »

எல்.ஜி. 5ஜி ஸ்மார்ட்போன்!

எல்.ஜி. நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள் மற்றும் சில சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது. எல்.ஜி. நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஜி8 ஸ்மார்ட்போனில் 5ஜி வசதி வழங்கப்படாது என தகவல் வெளியானது. இந்நிலையில், எல்.ஜி. நிறுவனம் தனது 5ஜி ஸ்மார்ட்போனினை பிப்ரவரி 24 ஆம் திகதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் வேப்பர் சேம்பர் பயன்படுத்தப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் வேப்பர் சேம்பர் ஸ்மார்ட்போன்களில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் ...

Read More »