அப்பிள் நிறுவனம் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
அப்பிள் நிறுவனம் புதிய ஏர்பாட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய வயர்லெஸ் ஹெட்போனில் ஆப்பிள் H1 ஹெட்போன் சிப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வயர்லெஸ் இணைப்பு முந்தைய மாடலை விட சீராகவும், அதிவேகமாகவும் இருக்கும்.
இத்துடன் ஹெ சிரி சேவையை பயன்படுத்தும் போது பாடல்கள், அழைப்புகள் மற்றும் வால்யூம் அட்ஜெஸ்ட் உள்ளிட்டவைகளை வேகமாக செயல்படுத்த முடியும். புதிய இயர்போனுடன் புதிய வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வழங்கப்படுகிறது.
கியூ.ஐ. சார்ஜிங் வசதி வழங்கும் வயர்லெஸ் சார்ஜரின் முன்புறம் எல்.இ.டி. லைட் வழங்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்து சார்ஜிங் நிலவரத்தை அறிந்து கொள்ளலாம். ஏற்கனவே ஏர்பாட்ஸ் பயன்படுத்துவோரும் இந்த வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் வாங்கி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்ஜிங் கேஸ் உடன் 24 மணி நேரத்திற்கு பேட்டரி பேக்கப் வழங்கும்படி புதிய இயர்பாட்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரமும், 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்யும் போது 3 மணி நேரத்திற்கும் பயன்படுத்த முடியும்.
ஏர்பாட்ஸ் மற்றும் ஸ்டான்டர்டு சார்ஜிங் கேஸ் விலை ரூ.14,900 என்றும் வயர்லெஸ் சார்ஜிங் கேசுடன் வாங்கும் போது ரூ.18,900 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் மட்டும் வாங்கும் போது ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கப்படும். புதிய இயர்போன் விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது.