போலி செய்திகளை முடக்க புதிய திட்டத்தை துவக்கிய வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் போலி செய்திகள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் புதிய திட்டத்தை துவங்கியிருக்கிறது.

வாட்ஸ்அப் நிறுவனம் ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ் (Share Joy, Not Rumours) எனும் புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. புதிய திட்டத்தின் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை மிகவும் கவனமாக பயன்படுத்துவது பற்றி கற்பிக்க இருக்கிறது.
முன்னதாக தொலைகாட்சி, அச்சு ஊடகம் மற்றும் வானொலி விளம்பரங்களின் மூலம் வாட்ஸ்அப் செயலியில் போலி தகவல்கள் பரப்பப்படுவதை நிறுத்துவது பற்றி பயனர்களுக்கு தகவல் வழங்கப்பட்டது. முதற்கட்டமாக இந்தியா முழுக்க பல லட்சம் பேருக்கு போலி தகவல்கள் பரவுவதை தடுக்கும் முறைகள் கொண்டு சேர்க்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.