நுட்பமுரசு

வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் லேப்டாப் அறிமுகம்

டெல் நிறுவனத்தின் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்பேஸ் ப்ரோ லேப்டாப் போன்று காட்சியளிக்கும் டெல் 7285 வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் ஆகும். டெல் லேடிட்டியூட் 7285 மாடல் லேப்டாப் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட உலகின் முதல் லேப்டாப் பார்க்க மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. டேப்லெட் மற்றும் கழற்றக் கூடிய கீபோர்டு கொண்டுள்ள புதிய ...

Read More »

கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்டபோன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். புதிய ஃபேப்லெட் குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சாதனம் ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 முதற்கட்டமாக அமெரிக்கா, கொரியா மற்றும் லண்டனில் செப்டம்பர் ...

Read More »

நானோபோன் சி: உலகின் மிகச் சிறிய மொபைல்போன்

உலகின் சிறிய மொபைல் போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை விட மிகச் சிறியதாக இருக்கும் புதிய மொபைல் போன் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். சர்வதேச மொபைல் போன் சந்தையில் இதுவரை தயாரிக்கப்பட்டதில் மிகச்சிறிய மொபைல் போன் யெஹ்ரா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எலாரி நானோபோன் சி என அழைக்கப்படும் இந்த போன் கிரெடிட் கார்டுகளை விட அளவில் சிறியதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எலாரி நானோபோன் சி விலை ரூ.3,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் ...

Read More »

சாம்சங் கேலக்ஸி நோட் 8!

நோட் 8 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:   * 6.3 இன்ச் AMOLED 1440×2960 பிக்சல் டிஸ்ப்ளே, * 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா * 8 எம்பி செல்ஃபி கேமரா * முன்பக்க கைரேகை ஸ்கேனர் * குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட் * 6 ஜிபி ரேம் * 3300 எம்ஏஎச் பேட்டரி * வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி சாம்சங் வழக்கப்படி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பெர்லின் நகரில் நடைபெறும் IFA விழாவிற்கு முன் வெளியிடும் நிலையில், ...

Read More »

டிஜிட்டல் அலுவலகம்: இனி அலுவலகம் போக வேண்டாம்

வேலைவாய்ப்புகள் சொற்பமாக இருக்கும் காலகட்டத்திலும் திறமையான ஊழியர்களுக்கான தேவையும் எப்போதும் நீடிக்கவே செய்கிறது. சிறந்த திறன்கொண்ட ஊழியர்கள், அவர்களது வசதிக்கேற்ப பணியாற்றுவதற்கான சூழலை உருவாக்கப் பல்வேறு சாத்தியங்களை மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இணைய வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் ‘எங்கிருந்தும் வேலை செய்யலாம்’ என்ற சூழ்நிலை உலகமெங்கும் உருவாகி வருகிறது. வேலை செய்பவர்களே எங்கே, எப்போது, எப்படிப் பணியாற்ற வேண்டும் என்பதை இதில் தேர்வு செய்துகொள்ளலாம். வீட்டிலிருந்து அரக்கப்பரக்கக் கிளம்பி, சம்பிரதாய அலுவல் உடைகளுடன் அலுவலகத்துக்கு வந்து நாளின் பெரும்பகுதி நேரத்தையும், ...

Read More »

கைரேகை ஸ்கேனர் கொண்ட ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்

ZTE நிறுவனம் கடந்த மாதம் ஸ்மால் ஃபிரஷ் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, தற்போது பிளேட் தொடரில் அதன் புதிய ஸ்மார்ட்போனான பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதுவரை இந்த கைப்பேசியின் விலை விவரங்கள் பற்றி நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டில் ZTE பிளேட் வி7 மற்றும் ZTE பிளேட் வி7 லைட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ZTE பிளேட் வி7 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு பிறகு, ZTE ...

Read More »

15000mah இரட்டை USB மற்றும் டிஜிட்டல் காட்சித்திரை

தகவல்தொழில்நுட்ப துணைப்பொருட்கள், ஆடியோ/வீடியோ மற்றும் கண்காணிப்புப் பொருட்களில் இந்தியாவின் முன்னணி விநியோகஸ்தரான ஜீப்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், 15000 Mah ஆற்றல் கொண்ட தனது பாக்கெட் அளவுள்ள புதிய ‘ZEB MC15000PD பவர் பேங்க்கினை’ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. கைக்கு அடக்கமாக, ஸ்டைலான மற்றும் கச்சிதமான தோற்றத்தைக் கொண்ட இந்த பவர் பேங்க் உங்களது சாதனங்களுக்கு மிகவும் எளிமையான முறையில் மின்னூட்டம் செய்திடும், மேலும் இதில் கூடுதலாக உள்ள எல்.இ.டி ஒளியுடைய டார்ச் அனைத்துவிதமான அவசரக்காலத்திலும் ஒளியினை வழங்கிடும். இது அனைத்து செயல்களையும் சிறப்பாக செய்யவும், ...

Read More »

சூரிய சக்தியால் உப்பு நீரை குடிநீராக்கலாம்!

பல நாடுகளில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு, கடல் நீரை குடிநீராக்கும் தொழில்நுட்பம் தீர்வாக முன்வைக்கப்படுகிறது. ஆனால், இத்தொழில்நுட்பத்திற்கு அதிக மின்சாரம் தேவை.அமெரிக்காவிலுள்ள, ரைஸ் பல்கலைக்கழகத்தின் நேனோ தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவு, ஏற்கனவே பரவலாக உள்ள சவ்வு மூலம் உப்பு நீரை வடிகட்டும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. இந்தப் புதிய தொழில்நுட்பத்தில், சூரிய ஒளி வெப்பத்தை உறிஞ்சும், நேனோ கரித் துகள்கள் தடவிய சவ்வு ஒன்று உள்ளது.இந்த சவ்வின் மீது சூரிய ஒளி படும்போது, அதன் வெப்பத்தால் நீர் ஆவியாகிறது. நீராவி குளிர்ந்ததும் துாய நீர் ...

Read More »

பட்டரி இல்லாமல் இயங்கும் மொபைல் போன்

பட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த செல்போன் எவ்வாறு சக்தியூட்டப்படுகிறது என்ற முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (இந்திய வம்சாவெளினர் உள்பட) பேட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை உருவாக்கியுள்ளனர். இந்த செல்போன் இயங்க தேவையான மின்சாரத்தை ஆம்பியன்ட் ரேடியோ சிக்னல்கள் மற்றும் வெளிச்சத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறது. பட்டரி இல்லாமல் இயங்கும் செல்போன் ப்ரோட்டோடைப் விளக்கத்தின் போது ஸ்கைப் கால்களை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஆஃப்-தி-ஷெல் உபகரணங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு ...

Read More »

மனதை படிக்கும் தொழில்நுட்பம்!

ஒருவரது மூளையில் உதிக்கும் சிந்தனைகளை, இன்னொருவர், ‘படிக்க’ உதவும் கருவிகள் சில ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை, ஒருவர் என்ன எண்ணை மனதில் நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு மட்டுமே துல்லியமானவை. மனதில் ஓடும் சிக்கலான எண்ணங்களை படிக்க, அவற்றால் முடியவில்லை. அண்மையில், அமெரிக்காவிலுள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனித மூளையில் உருவாகும் முழு வாக்கியத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.மனித எண்ணங்கள் சொற்களால் ஆன கோர்வைகளாக மூளையில் உதிப்பதில்லை. அவை, பல கருத்துக்களின் கோர்வை. எனவே, ‘வாழைப்பழம்’ என்ற பெயரோடு, எனக்கு ...

Read More »