உலகின் சிறிய மொபைல் போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டை விட மிகச் சிறியதாக இருக்கும் புதிய மொபைல் போன் சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
சர்வதேச மொபைல் போன் சந்தையில் இதுவரை தயாரிக்கப்பட்டதில் மிகச்சிறிய மொபைல் போன் யெஹ்ரா தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. எலாரி நானோபோன் சி என அழைக்கப்படும் இந்த போன் கிரெடிட் கார்டுகளை விட அளவில் சிறியதாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எலாரி நானோபோன் சி விலை ரூ.3,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளாக், ரோஸ் கோல்டு மற்றும் சில்வர் நிறங்களில் வெளியிடப்பட்டுள்ள நானோபோன் சி அழகிய தோற்றத்தில், மிக எளிதாகவும் ஆண்டி-ஸ்மார்ட் மொபைல் போன் ஆகும்.
நானோபோன் சி 30 கிராம் எடையில் 1-இன்ச் 128×96 பிக்சஸ் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இத்துடன் மீடியாடெக் MT6261D சிப்செட் மற்றும் RTOS இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 32 எம்பி ரேம், 32 எம்பி இன்டெர்னல் மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நானோபோன் சி 280 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த பேட்டரி 4 மணி நேர டாக்டைம், 4 நாள் ஸ்டான்ட்பை டைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் எம்.பி.3 பிளேயர், எஃப்.எம். ரேடியோ, போன் ரெக்கார்டிங் வசதிகளை கொண்டுள்ளது.
போன் அழைப்புகளுக்கு GSM கனெக்டிவிட்டி வழங்கப்பட்டுள்ள நானோபோன் சி 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். இயங்குதளங்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய ஏதுவாக ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal