பட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த செல்போன் எவ்வாறு சக்தியூட்டப்படுகிறது என்ற முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (இந்திய வம்சாவெளினர் உள்பட) பேட்டரி இல்லாமல் இயங்கும் உலகின் முதல் செல்போனினை உருவாக்கியுள்ளனர். இந்த செல்போன் இயங்க தேவையான மின்சாரத்தை ஆம்பியன்ட் ரேடியோ சிக்னல்கள் மற்றும் வெளிச்சத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
பட்டரி இல்லாமல் இயங்கும் செல்போன் ப்ரோட்டோடைப் விளக்கத்தின் போது ஸ்கைப் கால்களை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். இதன் ஆஃப்-தி-ஷெல் உபகரணங்கள் தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.
புதிய செல்போனில் செல்லுலர் டிரான்ஸ்மிஷன்களில் பவர்-ஹங்ரி எனும் வழிமுறையை பயன்படுத்தினர். இது மொபைல் போன்கள் புரிந்து கொள்ளும்படி ஒலியை ஏற்படுத்தும் அனலாக் சிக்னல்களை டிஜிட்டல் டேட்டாவாக மாற்றும்.
இந்த வழிமுறையில் மின்சக்தி அதிகளவு பயன்படுத்தப்படும் என்பதால் ஆம்பியன்ட் மின்சாரத்தை சார்ந்த மொபைல் போன் வடிவமைப்பது சாத்தியமற்றது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டரி இல்லாமல் இயங்கும் செல்போனில்- மொபைல் போனில் வாடிக்கையாளர் பேசும் போதோ அல்லது கவனிக்கும் போது ஸ்பீக்கர் மற்றும் மைக்ரோபோன்களில் இருந்து சிறிய அதிர்வுகளை சக்தியூட்ட பயன்படுத்தி கொள்கிறது.
தகவல்களை பரிமாற்றம் செய்ய இந்த மொபைல் போன் பிரதிபலிக்கப்பட்ட சி்க்னல்களை பேச்சாக என்கோடு செய்ய மைக்ரோபோனை பயன்படுத்திக் கொள்கிறது. தகவல்களை பெறுவதற்கு என்கோடு செய்யப்பட்ட ரேடியோ சிக்னல்களை போனின் ஸ்பீக்கர் மூலம் ஒலி அதிர்வுகளாக மாற்றிக் கொள்கிறது.
ப்ரோட்டோடைப் சாதனத்தில் வாடிக்கையாளர்கள் தகவல் அனுப்பவும், கவனிக்கவும் இரு பட்டன்களை கிளிக் செய்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோட்டோடைப் கொண்டு சாதாரண போனின் அம்சங்களான தகவல் பரிமாற்றங்களை பட்டன்களை கிளிக் செய்து பெற முடிகிறது.
ஸ்கைப் மூலம் ஆராய்ச்சியாளர்கள் அழைப்புகளை பெறவும், மற்றவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளவும், முடிந்தது. ரேடியோ சிக்னல்களை பரிமாற்றம் செய்ய இந்த ஆராய்ச்சியாளர்கள் பிரத்தியேக பேஸ் ஸ்டேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் சாதாரண செல்லுலார் நெட்வொர்க் உள்கட்டமைப்புகளிலோ அல்லது வை-பை ரவுட்டர்களிலும் புகுத்தி அழைப்புகளை மேற்கொள்ள செய்யலாம்.