ஒருவரது மூளையில் உதிக்கும் சிந்தனைகளை, இன்னொருவர், ‘படிக்க’ உதவும் கருவிகள் சில ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை, ஒருவர் என்ன எண்ணை மனதில் நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு மட்டுமே துல்லியமானவை. மனதில் ஓடும் சிக்கலான எண்ணங்களை படிக்க, அவற்றால் முடியவில்லை.
அண்மையில், அமெரிக்காவிலுள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனித மூளையில் உருவாகும் முழு வாக்கியத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.மனித எண்ணங்கள் சொற்களால் ஆன கோர்வைகளாக மூளையில் உதிப்பதில்லை. அவை, பல கருத்துக்களின் கோர்வை. எனவே, ‘வாழைப்பழம்’ என்ற பெயரோடு, எனக்கு வாழைப்பழம் பிடிக்கும்; என் நண்பருக்கு பிடிக்காது என்பது போன்ற சிக்கலான எண்ணக் கோவைகளும் மனதில் உதிக்கும்.
இந்த சிக்கலான எண்ணங்களை, எப்.எம்.ஆர்.ஐ., ‘ஸ்கேன்’ மூலம் மூளையில் ஏற்படும் மாற்றங்களை படம் பிடித்து, அந்தப் படங்களை கணினி மென்பொருள் கொண்டு அலசி, எளிதில் கண்டுபிடிக்கும் கருவியைத் தான் கார்னகி மெலன் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அடுத்து, மேலும் சிக்கலான மனித எண்ணங்களை படிக்கும் ஆராய்ச்சியிலும் அவர்கள் இறங்கியுள்ளனர்.
ஒருவரது மூளையில் உதிக்கும் சிந்தனைகளை, இன்னொருவர், ‘படிக்க’ உதவும் கருவிகள் சில ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை, ஒருவர் என்ன எண்ணை மனதில் நினைக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு மட்டுமே துல்லியமானவை.
மனதில் ஓடும் சிக்கலான எண்ணங்களை படிக்க, அவற்றால் முடியவில்லை. அண்மையில், அமெரிக்காவிலுள்ள கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், மனித மூளையில் உருவாகும் முழு வாக்கியத்தை கண்டறியும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.
மனித எண்ணங்கள் சொற்களால் ஆன கோர்வைகளாக மூளையில் உதிப்பதில்லை. அவை, பல கருத்துக்களின் கோர்வை. எனவே, ‘வாழைப்பழம்’ என்ற பெயரோடு, எனக்கு வாழைப்பழம் பிடிக்கும்; என் நண்பருக்கு பிடிக்காது என்பது போன்ற சிக்கலான எண்ணக் கோவைகளும் மனதில் உதிக்கும்.