சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 வெளியீட்டு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்டபோன் அடுத்த மாதம் வெளியிடப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கௌ டாங்சென் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
புதிய ஃபேப்லெட் குறிப்பிட்ட வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை என்றாலும் இந்த சாதனம் ஆகஸ்டு 23-ம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் இரண்டு பதிப்புகளாக வெளியிடப்பட இருக்கும் கேலக்ஸி நோட் 8 முதற்கட்டமாக அமெரிக்கா, கொரியா மற்றும் லண்டனில் செப்டம்பர் மாத துவக்கத்தில் வெளியிடப்படும் என இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய ஃபேப்லெட் அக்டோபர் மாதம் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 சிறப்பம்சங்கள்
* 6.3 இன்ச் சூப்பர் AMOLED இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
* கார்னிங் கொரில்லா கிளாஸ்
* ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் அல்லது எக்சைனோஸ் 8895 சிப்செட்
* 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
* 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
* டூயல் பிரைமரி கேமரா
* 3300 எம்.ஏ.எச். பேட்டரி