நுட்பமுரசு

உப்பிலிருந்து மின்சாரம்!

உப்பு மற்றும் குளிர் திரவங்களின் வடிவில் உபரி மின் சக்தியை சேமித்து, வேண்டும்போது பயன்படுத்தும் ஒரு பழைய தொழில்நுட்பத்தை கையிலெடுத்திருக்கிறது, ‘மால்ட்டா!’ இது, கூகுளின் பரிசோதனை நிறுவனங்களுள் ஒன்று.கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ பல ஆராய்ச்சி நிறுவனங்களை உள்ளடக்கியது. அதில் ஒன்று தான், ‘கூகுள் எக்ஸ்!’ இது, பல தொழில்நுட்பங்களை பரிசோதித்து வருகிறது. கூகுளின் தானோட்டி கார்கள் முதல், கூகுள் கிளாஸ் வரை பல புதுமைகள் இதே கூகுள் எக்சிலிருந்து வெளிவந்தவை.மால்ட்டாவின் தொழில்நுட்பம், இரண்டு, மூன்று பகுதிகளைக் கொண்டது. மின்சாரத்தை வெப்பமாக மாற்றி உப்புக் ...

Read More »

எலும்பு சிகிச்சைக்கு ‘3டி பிரின்டர்!’

சிறு வயதினருக்கு இடுப்போடு இணைந்த தொடை எலும்பு பகுதியில் ஏற்படும் குறைபாட்டை சரி செய்ய, சிக்கலான அறுவை சிகிச்சை தேவை. இச்சிகிச்சைக்கு ஆகும் நேரத்தைக் குறைக்க, முப்பரிமாண அச்சியந்திரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர், அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினர். அப்பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர் வித்யாதர் உபாசனியுடன் இணைந்து, தொடை எலும்பு குறைபாடுள்ள, 10 சிறுவர்களில் ஐந்து பேருக்கு, ‘சி.டி., ஸ்கேன்’களை எடுத்து, அதே மாதிரி தொடை எலும்புகளை முப்பரிமாண அச்சியந்திரத்தில் செயற்கையாக வார்த்தெடுத்தனர். அந்த மாதிரி எலும்புகளை வைத்து, வித்யாதர் ஒத்திகை பார்த்த பிறகு, அசல் நோயாளிகளுக்கு ...

Read More »

நானோபோன்!

பெரிய பெரிய ஸ்மார்ட்போன்கள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் நானோபோனை அறிமுகப்படுத்தியுள்ளது எலாரி நிறுவனம். மிகச் சிறிய அளவிலான இந்தப் போனில் 32 எம்பி நினைவக திறன், புளுடூத் வசதி போன்றவை உள்ளன. இந்த போனின் விலை ரூ.3,999.

Read More »

பட்ஜெட் விலையில் சியோமி ரெட்மி நோட் 5A

சியோமி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ரெட்மி நோட் 4 மாடலைத் தொடர்ந்து ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரெட்மி நோட் 5A சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அமோக வரவேற்பை பெற்ற ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனினை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் வாங்கி பயன்படுத்தி வரும் நிலையில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சியோமியின் ரெட்மி நோட் 5A ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறியதாகவும், விலை ...

Read More »

இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் முதல் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகிறது

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஆகஸ்டு 22-ம் திகதி வெளியாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மைக்ரோமேக்ஸ் புதிய ஸ்மார்ட்போன் வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, டாப் பெசலில் சென்சார்கள், இயர்போன் மற்றும் முன்பக்க கேமரா வழங்கப்படுகிறது. சமீபத்தில் இணையத்தில் வெளியான தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் 5.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்பட்டது. சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்ட வீடியோவில் எவோக் டூயல் நோட் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்படும் ...

Read More »

நோக்கியா 6

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் ரீ-என்ட்ரி ஸ்மார்ட்போன் சந்தையில் நோக்கியா பீச்சர் போன் மற்றும் மூன்று ஸ்மார்ட்போன்களால் துவங்கியுள்ளது. சர்வதேச சந்தையை தொடர்ந்து நோக்கியா 3310 (2017), நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு நோக்கியா 6 தவிர மற்ற சாதனங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படுகின்றன. நோக்கியா 6 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.5 இன்ச் 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குவால்காம் ...

Read More »

வந்தாச்சு குட்டி ஸ்மார்ட்போன்

இன்றைய இளைஞர்களின் மோகம் பெரிய டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போனை நோக்கியே பயணிக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. நானிட் மைக்ரோ என பெயரிடப்பட்டுள்ள இக் கைப்பேசி வெறும் 1.8 அங்குல அளவே உயரம் உடையது. ஸ்மார்ட்போன் கைக்கு அடக்கமாக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியினை ஏனைய Androidமற்றும் IOS சாதனங்களுடனும் இணைத்து பயன்படுத்த முடியும். இதில் மைக்ரோ சிம் மற்றும் மெமரி கார்டுகளை செலுத்தும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய ஸ்மார்ட்போனில் கால், மெசெஜ் மற்றும் ...

Read More »

செல்ஃபி எடுக்க கற்றுக்கொடுக்கும் மொபைல் ஆப்!

செல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். செல்ஃபிக்களின் ஆதிக்கம் சமூகவலைதளங்களில் அதிகரித்து வரும்நிலையில், மக்களுக்கு சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு இந்த செயலி கற்றுக்கொடுக்கும் என்கிறார்கள். இதில் உள்ள அல்காரிதம், செல்ஃபி எடுக்கும் போது கேமிராவை எங்கு வைப்பது, எந்த திசையில் சரியான ஒளி கிடைக்கிறது, முகத்தின் அளவு ஆகியவற்றை கணக்கில் கொள்கிறது. அதன்மூலம் சிறந்த செல்ஃபிக்களை எடுக்க பயனாளர்களுக்கு உதவும் என்று கூறுகிறார்கள் வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள். ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் முகங்கள் குறித்து 360 டிகிரி கோணத்தில் செய்யப்பட்ட ...

Read More »

தடுமாற்றத்தை தடுக்கும் காலணி!

வயதானவர்கள் நடக்கும்போது கீழே விழுந்துவிடாமல் இருக்க கை தடிகளை பயன்படுத்துவார்கள். அதற்கு பதிலான அணிந்திருக்கும் காலணியே சமநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமான காலணியை உருவாக்கியுள்ளனர். இந்த காலணியின் அடிப்பகுதியில் பற்சக்கரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. தடுமாறும் நேரத்தில் தானாகவே உடல் சமநிலையை இந்த காலணி ஏற்படுத்தி தரும்.

Read More »

ஃபிளாஷ் பிளேயர் இனி இருக்காதா?

இணையத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் அடோப் ஃபிளாஷ் மென்பொருளுக்கு விடைகொடுக்க இருப்பதாக அடோப் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருக்கிறது. அடோப் வெளியிட்ட அறிவிப்பில், ‘2020-ம் ஆண்டுவாக்கில் ஃபிளாஷ் பிளேயர் மென்பொருளை வெளியிடுவது மற்றும் அதற்கான அப்டேட்கள் நிறுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஃபிளாஷ் மென்பொருளின் முடிவு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டது தான் எனவும் இப்போதாவது அடோப்புக்கு இதை அறிவிக்க மனம் வந்ததே என்பது போலவும் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஃபிளாஷ் பற்றிப் பலவித கருத்துகள் வெளிப்பட்டாலும் ஒரு காலத்தில் அது கொண்டாடப்பட்ட மென்பொருளாக இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஃபிளாஷ் ...

Read More »