கூகுள் முன்னணித் தேடியந்திரமாக விளங்கினாலும், சிறார்கள் இணையத்தில் உலாவும்போது பயன்படுத்த பாதுகாப்பான தேடியந்திரம் தேவை. அந்த வகையில், சிறார்களுக்கான தேடியந்திரமாக, ‘கிட்டி’ (Kidy) தேடியந்திரம் புதிதாக இணைந்துள்ளது. சிறார்களுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கம் இந்தத் தேடியந்திரத்தில் குறிச்சொற்கள் மூலம் முடக்கப்படுகின்றன. மேலும் பல வகையான பாதுகாப்பு அம்சங்களும் அளிக்கப்படுகின்றன. கூகுள் தேடியந்திரம் அளிக்கும் தேடல் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தேடியந்திரமும் செயல்படுகிறது. இணைய முகவரி: https://kidy.co/
Read More »நுட்பமுரசு
ஃபயர்பாக்ஸில் புதிய வசதி!
ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதேபோல இப்போது சைடுவியூ எனும் வசதியை ஃபயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் காணொளி பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம் அல்லது ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தபடி வேறு ஒரு தளத்தைப் பார்க்கலாம். ஃபயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதைத் தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இணைய முகவரி: https://bit.ly/2JrgeC4
Read More »கூகுளில் புதிய வசதி!
தேடியந்திர நிறுவனமான கூகுள் நூற்றுக்கும் மேற்பட்ட துணை சேவைகளைக் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்றான ‘கூகுள் டிரெண்ட்ஸ்’ சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் அறிமுகமாகி உள்ளன. கூகுளில் தேடப்படும் பதங்களின் அடிப்படையில், தற்போது எந்தப் பதம் அதிகம் தேடப்படுகிறது என்பதை அறிவதற்கான சேவையாக இது அமைந்துள்ளது. இணைய உலகில் போக்குகளை அறிய இந்த சேவை ஏற்றதாக இருக்கிறது. 2006-ல் அறிமுகமான இந்த சேவையில் அண்மையில் புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு: https://trends.google.com/trends/?geo=IN
Read More »போகுமிடமெல்லாம் தானே வரும் சூட்கேஸ்!
கொஞ்சம் செயற்கை நுண்ணறிவு, சக்திவாய்ந்த சில்லு, இரண்டு மோட்டார் சக்கரங்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிடைப்பதுதான், ‘ஓவிஸ்’ சீனாவைச் சேர்ந்த, பார்வர்டு எக்ஸ் ரோபாடிக்ஸ் தயாரித்துள்ள ஓவிஸ், ஒரு புத்திசாலி சூட்கேஸ்! அது தன் உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ளும் கேமிரா வசதியுடன் இருப்பதால், வேறு யாரும் அதை ‘கையாள’ முடியாது. உரிமையாளர் எங்கு சென்றாலும், அவரது வலது பக்கமாக கூடவே வரும் விசுவாசம் கொண்டது ஓவிஸ். படிகள், தடைகள் வந்தாலோ, பேட்டரி தீர்ந்து போனாலோ, உரிமையாளர் அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துச் செல்லலாம். ஓவிஸ் தானாக ...
Read More »மேசையுடன் கூடிய புத்தகப் பை!
பள்ளி குழந்தைகள், தங்கள் முதுகில் சுமந்து செல்லும் வகையில், எடை குறைவான, சிறிய மேசையுடன் கூடிய, ‘ஸ்கூல் பேக்’கை, கான்பூர், ஐ.ஐ.டி.,யில் படித்த மாணவர், உருவாக்கி சாதனை படைத்துள்ளார். உ.பி., மாநிலம், கான்பூரில் உள்ள, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப மையத்தில் படித்த மாணவர், ஈஷான் சதாசிவன், 27.இவர், பள்ளி குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய, சிறிய மேசை இணைக்கப்பட்ட, ஸ்கூல் பேக்கை உருவாக்கி உள்ளார். 680 கிராம் எடையுள்ள இந்த பேக்கின் விலை, 400 ரூபாய் மட்டுமே. இந்த பேக்கில், இலகு வகை டியூப்களால் ஆன, ...
Read More »மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பம்!
மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன. மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர். அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக ...
Read More »விரைவில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம்!
வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது. சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52 மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது. இத்துடன் ...
Read More »உலகின் அதிவேகமான கணினி!
உலகின் மிக அதிவேகமான ஒரு நிமிடத்தில் 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளை செய்யும் திறன் கொண்ட சூப்பர்கம்ப்யூட்டரை அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர்கம்ப்யுட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர் இதற்கு முன் இருந்த சூப்பர்கம்ப்யூட்டரை விட 8 மடங்கு அதிக திறன் கொண்டது. அறிவியல் கணக்குகளை ஒரு நொடியில் 3 பில்லியன் பில்லியன் துல்லியமான முறையில் தீர்த்து வைக்கும். ஒரு நிமிடத்திற்கு 2 ...
Read More »விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வாட்ஸ்அப்!
விண்டோஸ் இயங்குதள டெஸ்க்டாப் சாதனங்களில் வேலை செய்யும் படி வாட்ஸ்அப் செயலி உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருநிறுவனங்கள் இணைந்து டெஸ்க்டாப் செயலியை உருவாக்குவதாக கூறப்படுகிறது. வாட்ஸ்அப் விண்டோஸ் போன் செயலியில் சீரான அப்டேட் வழங்கப்படும் நிலையில், விண்டோஸ் சென்ட்ர் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் செயலிக்கான யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (Universal Windows Platform -UWP) கான்செப்ட் ஆர்ட் முழுமையாக ...
Read More »புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி!
கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. ...
Read More »
Eelamurasu Australia Online News Portal