சிறார்களுக்கான தேடியந்திரம்!

கூகுள் முன்னணித் தேடியந்திரமாக விளங்கினாலும், சிறார்கள் இணையத்தில் உலாவும்போது பயன்படுத்த பாதுகாப்பான தேடியந்திரம் தேவை. அந்த வகையில், சிறார்களுக்கான தேடியந்திரமாக, ‘கிட்டி’ (Kidy) தேடியந்திரம் புதிதாக இணைந்துள்ளது.

சிறார்களுக்குப் பொருத்தமில்லாத உள்ளடக்கம் இந்தத் தேடியந்திரத்தில் குறிச்சொற்கள் மூலம் முடக்கப்படுகின்றன. மேலும் பல வகையான பாதுகாப்பு அம்சங்களும் அளிக்கப்படுகின்றன.

கூகுள் தேடியந்திரம் அளிக்கும் தேடல் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தத் தேடியந்திரமும் செயல்படுகிறது.

இணைய முகவரி: https://kidy.co/