கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.
ஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
இதேபோன்று XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆன்ட்ராய்டு பி மூன்றாவது டெவலப்பர் பிரீவியூவில் கூகுள் பிரான்டிங் கொண்ட வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பது, புதிய வயர்லெஸ் சார்ஜிங் டாக் உருவாக்கப்படுவதை உணர்த்தியிருக்கிறது.
இணைக்கப்ப்ட்ட சாதனங்களில் (கனெக்ட்டெட் டிவைசஸ்) கீழ் புதிய பிரிவை கூகுள் உருவாக்கலாம் என்றும், இவை டிரீம்லைனர் என்ற குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இந்த சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருப்பதும் சோர்ஸ் கோடு மூலம் தெரியவந்துள்ளது.
டிரீம்லைனர் சாதனம் முற்றிலும் நிறுவனத்தினுள் சோதனை செய்யப்படும் பட்சத்தில், வெளிப்புறம் இவை சோதனை செய்ய கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் புதிய தகவல்கள் முற்றிலும் சோர்ஸ் கோடு சார்ந்து வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியீடு சமயத்தில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான புகைப்படங்களின் படி கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
கிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கமராவையே வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal