நுட்பமுரசு

சர்வதேச விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சோனி

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனம் வெளியிட இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இந்த மாதம் நடைபெற்று முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவினை தொடர்ந்து, பிப்ரவரி 27 ஆம் திகதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன. மற்ற நிறுவனங்களை போன்றே சோனி நிறுவனமும் தனது சாதனங்களை வெளியிட தயாராகி வருகிறது. அந்த வகையில் சோனி நிறுவனம் மொபைல் காங்கிரஸ் ...

Read More »

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த உயர் ரக ஸ்மார்ட்போன்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கண்டறிந்தவர்களில் ஒருவரான ஆன்டி ரூபின், செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் புதிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறார். உலகின் பிரபல ஸ்மார்ட்போன் இயங்குதளமாக இருக்கும் ஆண்ட்ராய்டு-ன் இணை நிறுவனரான ஆன்டி ரூபின் செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் உயர் ரக ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவல்களில் ஆன்டி ரூபின் தனது புதிய நிறுவனத்தை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. எசென்ஷியல்ஸ் என்ற பெயரில் ஆன்டி ரூபின் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாதனங்களை ...

Read More »

துயிலெழுப்பும் ‘பார்கோடு’

செயலிகள் உலகில் துயிலெழுப்புவதற்கான செயலிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பிரிவில் புதிய செயலிகள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு செயலியும் சின்னதாகவேனும் ஒரு புதுமை செய்து நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. அந்த வகையில் ‘பார்கோடு அலாரம்’ செயலி, காலையில் கண் விழிப்பதற்காக அலாரம் ஒலிக்கும் போது, ஏதேனும் பொருட்களின் பார்கோடை ஸ்கேன் செய்ய வைக்கிறது. இப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே அலாரமை நிறுத்த முடியும். காபி கோப்பை அல்லது பல்பசை போன்ற பொருட்களைத் தேடி ஸ்கேன் செய்வதன் மூலம் தூக்கம் கலைந்து போகும் ...

Read More »

கண்ணிவெடியை அழிக்க குட்டி விமானம்

கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி விமானத்தை, குஜராத்தை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார். குஜராத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜாலா (14) என்ற சிறுவன், கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார். கண்ணிவெடியில் சிக்‌கி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழப்பதுடன், கால்களையும் இழக்கின்றனர் எனக் கூறிய அச்சிறுவன் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த குட்டி விமானத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த விமானத்தை இன்னும் மேம்படுத்தி பயன்படுத்துவது தொடர்பாக, ஹர்ஷவர்தன் ஜாலாவுக்கு குஜ‌ராத் மாநில அரசு 5 கோடி ...

Read More »

‘டான்வாஸ்’ உணர் திரை

தொடு திரைகள் வந்து விசைப் பலகைகள், மவுஸ் போன்றவற்றுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டன. திரையில் அடுத்த புரட்சி என்ன? ‘ஹாப்டிக் ஸ்க்ரீன்’ எனப்படும், தொழில்நுட்பம் தான். வழக்கமான தொடு திரை, தட்டையாக, பளிங்கு கல் போல இருக்கும். ஆனால், ‘டான்வாஸ்’ உருவாக்கியிருக்கும் புதிய தொழில்நுட்பத்தில், திரையின் மேற்பரப்பில் நுண்ணிய மேடு, பள்ளங்களை உருவாக்க முடியும். இதனால், திரையுடன் உராயும் விரல்களால் வழவழப்பு போன்ற உணர்வுகளை பெற முடியும். டான்வாசின் உணர் திரையில் தெரியும் ஜீன்ஸ் துணி உருவத்தின் மீது விரலை வைத்தால், டெனிம் துணியை தொடுவது ...

Read More »

உலகின் மிகப்பெரிய 4K வளைந்த மானிட்டர் வெளியீடு

பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. பிலிப்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய 4K மானிட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. 40 இன்ச் அளவு கொண்ட இந்த மானிட்டர் 10-பிட் பேனல் மற்றும் 3840×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. பிலிப்ஸ் அறிமுகம் செய்துள்ள இந்த மானிட்டர் BDM4037UW என பெயரிடப்பட்டுள்ளது. பிலிப்ஸ் BDM4037UW மானிட்டர் அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்க VA பேனல்களை பயன்படுபடுத்துகிறது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட பிக்சல் அமைப்பு தொழில்நுட்பம் 178/178 கோணத்திலும் பார்க்கும் வசதியை வழங்குகிறது. அல்ட்ரா வைடு ...

Read More »

மூன்று கால்களுடன் இளம்பெண்

காட்சிப் பிழை என்பதன் நவீன பிரதிபலிப்பாக மூன்று கால்களுடன் இணையத்தை குழப்பும் இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளவாசிகளை மண்டையை பிறாண்டிக் கொள்ள வைத்துள்ளது. சமீபத்தில் ஒரு இளம்பெண்ணின் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனதுடன் கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது. காரணம், அதில் காணப்படும் பெண் மூன்று கால்களுடன் அமர்ந்திருப்பது போன்ற காட்சிப் பிழையால் ஏற்படும் மாயத் தோற்றம் என்பது அந்தப் படத்தை மிக நெருக்கமாக உற்றுப் பார்த்தப் பின்னரே புலனாகிறது, அந்தப் பெண்ணின் வலதுபுறத்தில் தோன்றும் மூன்றாவது கால், அவருக்கு சொந்தமானது அல்ல, அவர் கையில் பிடித்திருக்கும் பூச்செடி ...

Read More »

யூடியூபிற்கு போட்டியாக புதிய களத்தில் கால்பதிக்கும் பேஸ்புக்

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் அப்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு ...

Read More »

5000mAh பேட்டரி திறன் கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன்

ஆசஸ் நிறுவனம் சீனாவில் அதன் புதிய ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தல் பதிப்பே ஆகும். இந்த ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன் 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய இரண்டு உள்ளடங்கிய சேமிப்பு வகைகளில் வருகிறது. 64ஜிபி வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன் CNY 1,999 (சுமார் ரூ.19,600) விலையில் கிடைக்கும். மற்றும் 32ஜிபி வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் ...

Read More »

ஐஃபோன் பிறந்த கதை

அப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. ஐஃபோன் வைத்திருப்பது சமூக அந்தஸ்தைக் காட்டும் விஷயமாகக் கருதப்படும் நிலையில் அது கடந்த வந்த பாதையை அலசுகிறது இந்தக் கட்டுரை. ”ஸ்டீவ் என்னிடம் இது ஒரு மிகவும் முக்கியமான ரகசிய விஷயம் என்று கூறியிருந்தார். இதைப்பற்றி வெளியில் சொன்னால் வேலையிலிருந்து நீக்கிவிடப்போவதாக கூறியிருந்தார்.” ”நான் மிகவும் பதற்றமானேன்.” உலகின் மிகவும் வெற்றிகரமான தொழில்நுட்ப தயாரிப்பாகவிருக்கும் அப்பிள் ஐஃபோனின் முன் மாதிரி தொலைந்துவிட்டது என்பதை ஸ்டீவ் ஜாப்ஸிடம் எப்படி விளக்கிக்கூறுவது என்பதை டோனி ஃபெடெல் யோசித்து ...

Read More »