கண்ணிவெடியை அழிக்க குட்டி விமானம்

கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி விமானத்தை, குஜராத்தை சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

குஜராத்தை சேர்ந்த ஹர்ஷவர்தன் ஜாலா (14) என்ற சிறுவன், கண்ணிவெடிகளை கண்டறிந்து அழிக்கும் குட்டி விமானத்தை உருவாக்கியுள்ளார். கண்ணிவெடியில் சிக்‌கி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழப்பதுடன், கால்களையும் இழக்கின்றனர் எனக் கூறிய அச்சிறுவன் அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த குட்டி விமானத்தை உருவாக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விமானத்தை இன்னும் மேம்படுத்தி பயன்படுத்துவது தொடர்பாக, ஹர்ஷவர்தன் ஜாலாவுக்கு குஜ‌ராத் மாநில அரசு 5 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

இந்த விமானம் நிலத்திற்கு மேல் 2 அடி உயரத்தில் பறந்து கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும். விமானத்துக்குள்ளிருக்கும் டெட்டனேட்டர், கண்ணிவெடி இருக்கும் இடத்தின் மீது விழுந்து அதை வெடிக்க வைத்து அழிக்கும் என ஹர்ஷவர்தன் ஜாலா தெரிவித்துள்ளார்.