ஆசஸ் நிறுவனம் சீனாவில் அதன் புதிய ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தல் பதிப்பே ஆகும். இந்த ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன் 32ஜிபி மற்றும் 64ஜிபி ஆகிய இரண்டு உள்ளடங்கிய சேமிப்பு வகைகளில் வருகிறது. 64ஜிபி வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போன் CNY 1,999 (சுமார் ரூ.19,600) விலையில் கிடைக்கும். மற்றும் 32ஜிபி வகை கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த கைப்பேசியின் மிகப்பெரிய சிறப்பம்சமாக இதில் 5000mAh பேட்டரி திறன் கொண்டுள்ளது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போனில் ZenUI 3.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 7.0 நௌகாட் மூலம் இயக்கப்படுகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போனில் 2.5D கிளாஸ் உடன் 5.20 இன்ச் எச்டி ஐிபிஎஸ் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து அக்டா கோர் மீடியாடெக் MT6750 ப்ராசசர் மூலம் இயங்குகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 2000ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் பெகாசஸ் 3எஸ் ஸ்மார்ட்போனில் PDAF, f/2.0 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஸ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது.
இந்த கைப்பேசியில் 5000mAH பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், FM ரேடியோ, ப்ளூடூத் 4.0, USB OTG, 3ஜி, ஜிஎஸ்எம், 4ஜி எல்டிஇ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.