செயலிகள் உலகில் துயிலெழுப்புவதற்கான செயலிகள்தான் அதிகம் இருக்கின்றன. ஆனாலும் இந்தப் பிரிவில் புதிய செயலிகள் அறிமுகம் ஆகிக்கொண்டேதான் இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு செயலியும் சின்னதாகவேனும் ஒரு புதுமை செய்து நம்மைக் கவர்ந்திழுக்கின்றன.
அந்த வகையில் ‘பார்கோடு அலாரம்’ செயலி, காலையில் கண் விழிப்பதற்காக அலாரம் ஒலிக்கும் போது, ஏதேனும் பொருட்களின் பார்கோடை ஸ்கேன் செய்ய வைக்கிறது.
இப்படிச் செய்வதன் மூலம் மட்டுமே அலாரமை நிறுத்த முடியும். காபி கோப்பை அல்லது பல்பசை போன்ற பொருட்களைத் தேடி ஸ்கேன் செய்வதன் மூலம் தூக்கம் கலைந்து போகும் என்பதோடு, காலைப் பணிகளைத் தொடங்குவதற்கான உற்சாகத்தையும் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு: http://bit.ly/2i7Bt9d
Eelamurasu Australia Online News Portal