இலக்கியமுரசு

எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம் – வீழமாட்டோம்!

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன. 1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய தமிழினத்தை பேரினவாதம் திட்டமிட்டு அழித்த வரலாறே 1983 இனக்கலவரம். அன்றிலிருந்து இருபத்தாறு ஆண்டுகள் ...

Read More »

குழந்தைப் பாடல்: பொங்கல் திருநாள்

பொங்கல் திருவிழா வந்தது புதிய மகிழ்வைத் தந்தது சங்கத் தமிழர் பெருமையைத் தரணி புகழச் சொன்னது! உழவர் நாளாய் மலர்ந்தது உழைப்பின் அருமை புரிந்தது மண்ணில் விளைந்த நெல்மணி பானையில் பொங்குது கண்மணி! இல்லம் சிறக்கச் செய்தது இனிப்புப் பொங்கல் ஆனது உள்ளம் தேனாய் இனிக்கவே உறவுப் பொங்கல் ஆனது! சோலை மரங்கள் பூத்தன சொக்கப் பானைகள் எரித்தன பாலும் நெய்யும் சேர்ந்தது பாசப் பொங்கல் இனித்தது!

Read More »

தமிழர் குடியேறிய வரலாறு- அவுஸ்ரேலியாவில் தமிழர்!

ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு. இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழர் குடியேறிய வரலாறு ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : முகையதீன் வக்குசு ...

Read More »

தமிழறிஞர்களின் பார்வையில் கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி தமிழறிஞர்கள் எழுதிய பாடல்கள், கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம். நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர். அவற்றில் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள என இருவகை விழாக்கள் உண்டு. சமய விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ்வுண்மையினை… “தொல் கார்த்திகை நாள்” என்னும் திருஞானசம்பந்தரது கூற்று மெய்ப்பிக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் ...

Read More »

மாவீரர் நாளும் கார்த்திகைப்பூவும்!

கார்த்திகைப்பூவும் கார்த்திகைக் கனவுகளும் ஈழத்தமிழர்களினதும் புலம்பெயர் தமிழர்களினதும் வாழ்வில் மறக்கமுடியாத நாளாக கார்திகை 27 ம் திகதி காணப்படுகிறது. மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தம் உயிர்களை ஆயுதமாக்கி போராடி மடிந்த மாவீரர்களை நினைவேந்தும் நாள் மாவீரர் நாளுக்கென்றே பிறந்தாற்போல் இந்தமாதத்திலேயே கார்திகைப்பூக்களும் மலரும். புலிகளையும் தமிழீழத்தையும் அடையாளப்படுத்தும் சிகப்பு மஞ்சள் வர்ணங்களோடும் மாவீரர் நாளில் ஏற்றப்படும் சுடரைப் போன்ற தோற்றத்துடனும் போராளிகளின் கழுத்தில்  இருந்த சயனட்டை ஒத்த நச்சுத்தன்மையோடும் கார்திகை மலர்கள் எவருக்கும் சொல்லாமலேயே மாவீரர்களை நினைவூட்டும். எத்தகைய  அடக்குமுறை வந்தபோதும் – மாவீரர் நாளில் ...

Read More »

அவுஸ்ரேலியான்னா ‘பயம்’… அது இப்போ இல்லையா?

“ஸ்விங் பந்துகளையும் சரி, ஸ்பின் பந்துகளையும் சரி, ஸீம் பவுலிங்கையும் சரி எங்களால் எதையுமே  சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. தன்னம்பிக்கை அடியோடு உடைந்து போயிருக்கிறது” –  வருத்தம் தோய்ந்த முகத்தோடு வார்த்தைகள் உலர பொறுமையாகச் சொல்லியிருக்கிறார் ஆஸியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை எந்த ஆஸி கப்டனும் இப்படித் தேம்பியதில்லை, கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஆண்டில் இப்படிச் சரிந்ததும் இல்லை. டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 என அத்தனையிலும் மண்ணை கவ்வி, நிலைகுலைந்து போயிருக்கிறது ஆஸ்திரேலியா. கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்ரேலியா ஒரு சிறந்த அணி என்பதில் எந்த ...

Read More »

உங்கள் ‘பிறந்த திகதி’க்கு இதுதான் சரியான ‘தொழில்’..!

நியூமராலஜி என்ற எண் கணிதத்தின் படி ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு குணம் உண்டு. 1 முதல் 9 வரை உள்ள தேதிகளில் பிறந்தவர்களுக்கு என ஒருசில குணங்கள் இருக்கின்றது என்றும், அந்தத் திகதிகளில் பிறந்தவர்களுக்கு எந்தத் தொழில் அல்லது எந்த வேலைப் பொருத்தமாக இருக்கும் என்றும் எண் கணிதத்தின்படி கூறலாம். இந்த எண் கணிதத்தை பின்பற்றி உங்கள் பிறந்த நாளுக்கு உரியத் தொழிலை தேர்வு செய்தால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான முறையில் முன்னேறலாம். 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கான தொழில்கள் 1 என்ற ...

Read More »

மாவீரர்களின் மலர் பொப்பியும் கார்த்திகைப்பூவும்

இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூறிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் ...

Read More »

கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதம் அடித்துள்ளார்

நியூசிலாந்துக்கு எதிராக கேப்டன் பதவியில் 6-வது சதத்தை (103 ரன்) பதிவு செய்தார். அதாவது கப்டன் பதவியில் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 சதமும், இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்துக்கு எதிராக தலா ஒரு சதமும் அடித்துள்ளார். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய பயணத்தின் போது டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்றார். இதை தொடர்ந்து வீராட்கோலி டெஸ்ட் கப்டன் பொறுப்பை ஏற்றார். நியூசிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் வீராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 48-வது டெஸ்டில் ...

Read More »

“ஆஸ்திரேலியா” அருணகிரி எழுதிய நூல் இன்று வெளியீடு

இராமலிங்கர் பணி மன்றம், ஏவிஎம் இராஜேஸ்வரி அறக்கட்டளை இணைந்து நடத்தும் 51 ஆவது ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழாவில், இன்று 3.10.2016 திங்கட் கிழமை மாலை ஐந்து மணிக்கு, அருணகிரி எழுதிய ஆஸ்திரேலியா என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தலைமை ஏற்கிறார்.வழக்கறிஞர் காந்தி முன்னிலை வகிக்கின்றார். இடம்-  ஏவிஎம் இராஜேஸ்வரி திருமண மண்டபம், இராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை. 

Read More »