பொங்கல் திருவிழா வந்தது
புதிய மகிழ்வைத் தந்தது
சங்கத் தமிழர் பெருமையைத்
தரணி புகழச் சொன்னது!
உழவர் நாளாய் மலர்ந்தது
உழைப்பின் அருமை புரிந்தது
மண்ணில் விளைந்த நெல்மணி
பானையில் பொங்குது கண்மணி!
இல்லம் சிறக்கச் செய்தது
இனிப்புப் பொங்கல் ஆனது
உள்ளம் தேனாய் இனிக்கவே
உறவுப் பொங்கல் ஆனது!
சோலை மரங்கள் பூத்தன
சொக்கப் பானைகள் எரித்தன
பாலும் நெய்யும் சேர்ந்தது
பாசப் பொங்கல் இனித்தது!