Home / இலக்கியமுரசு (page 3)

இலக்கியமுரசு

“காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது“!

இவான் துர்கனேவ் ‘காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது. காதலின் முன் வாழ்வின் வரையறைகள் அர்த்தமற்றவை. வேறெந்த உணர்ச்சிகளுக்கும் பொருளில்லை. காதல், வாழ்வின் ஓர் அங்கமல்ல; காதலே வாழ்வின் முழுமை. நிராகரிப்பின் உச்சத்திலும் அவமானத்தின் கீழ்மையிலும்கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்!’ இவான் துர்கனேவின் வாழ்க்கையில் இருந்து காதலை மேற்சொன்னவாறு புரிந்துகொள்ளலாம். உலக இலக்கியத்தின் எந்தப் பக்கத்திலும் துர்கனேவைப் போலொரு கதாபாத்திரத்தைப் பார்க்க முடியாது. எழுதப்பட்டிருந்தாலும் ஏற்கமுடியாத பாத்திரமாக துர்கனேவ் ...

Read More »

தமிழில் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைகள்!

ஆழியாள் என்று இலக்கியதளத்தில் அறியப்படும் மதுபாஷினி அவர்களின் சமீபத்திய பங்களிப்பு  “பூவுலகைக் கற்றலும் கேட்டலும்” எனும் கவிதைத் தொகுப்பு . தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களின் கவிதைத் தொகுப்பு நூல் இது. தமிழில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் முதல் முயற்சி. பூர்வீக மக்களின் இன ரீதியான புறக்கணிப்பு, அவமானம், இயலாமை, களவாடப்படும் தலைமுறை, களவாடப்பட்ட தேசம், நிலம்,  அடையாள நெருக்கடி, ஒடுக்குமுறை….என்று விரிந்துசெல்லும் அவர்களின் பன்முகப் பிரச்சனைகளை உயிர்ப்புடன் முன்வைக்கும் கவித்துவம் ...

Read More »

எரிச்சலூட்டும் முதியவனா?!

ஆஸ்திரேலியாவில் ஒரு நகரில் மருத்துவமனையின் முதியோர்நல சிகிச்சை பிரிவில் ஒரு முதியவர் காலமானார். அவரிடம் மதிப்பான எதுவும் இல்லை என்றுதான் நினைத்தார்கள். பின்பு செவிலியர் அவர் விட்டுசென்ற சொற்பமான பொருட்களை சோதனையிட்டால் கிடைத்தது ஒரு ‘கவிதை’. அதன் தரமும் பொருளும் கவனத்தை ஈர்த்ததால் மருத்துவமனை செவிலியர் அனைவருக்கும் நகலெடுத்து கொடுத்தனர். பின்பு அதை மெல்போர்னுக்கு எடுத்து வந்த ஒரு செவிலியர், இளையோர் அனைவருக்குமான அந்த முதியவரின் சொத்தான கவிதையை மனநலம் ...

Read More »

வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்!

நான் பறந்து கொண்டேயிருப்பேன் நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன் நான் பிறந்தேன் நற்பண்புகளுடன் நான் பிறந்தேன் கனவுடன் வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன் நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன் நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன். தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.   – மாணவர்கள் ...

Read More »

செடில் காவடி- ஏற்பு. எயிட்ஸ்

முதுகில் வலி என்றார். என்னவென்று பார்த்போது இவரது முதுகில் இரண்டு நிரையாகக் காயங்கள் இருப்பதைக் கண்டேன். அதில் ஒன்று மிகவும் சீழ் பிடித்திருந்தது. இவை என்ன காயங்கள் என நினைக்கிறீர்கள்? தானாகத் தேடிக் கொண்ட காயங்கள் வலிந்து தேடிய காயங்கள் ஆயினும் அவரைக் கண்டிக்கவோ பேசவோ முடியவில்லை எமது பாரம்பரியமும் வழிபாட்டு முறையும் சார்ந்ததைச் செய்த அவரை  எவ்வாறு கண்டிப்பது காரணம் அது காவடி எடுத்ததால் வந்தது. காவடி எமது பாரம்பரிய ...

Read More »

“பெத்தவளே உன் பெருமை ஒத்தவரி சொல்லலியே!” – உருக்கும் வைரமுத்து கவிதை

நம்மைப் பெற்று வளர்க்க தூக்கம், சாப்பாட்டைத் துறந்து, பிள்ளைகள் சந்தோஷமே தன் சந்தோஷம் என்று வாழும் தாயின் தியாகத்துக்கு எதுவுமே ஈடாகாது. நாற்பது வயதை எட்டிய ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவரவர் அம்மாவை சரியாகப் பார்த்துக்கொள்ளவில்லையோ என்கிற குற்ற உணர்வு மனதுக்குள் தொக்கி நிற்கும். அப்படியொரு சந்தர்ப்பத்தில் கவிப்பேரரசு வைரமுத்து தன் தாய்க்காக ‘முதல் முதலாய் அம்மாவுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கவிதை இன்றளவும் பிரபலம். வைரமுத்துவின் ‘கொஞ்சம் தேநீர் நிறைய ...

Read More »

கலை அழகு மிளிரும் தலை அலங்கார நகைகள்

பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. தங்கத்தில் செய்யப்படும் பெரும்பாலான நகைகள் பெண்களுக்கு உரியதாகவே உருவாக்கப்படுகின்றன. பெண்கள் அணிகின்ற நகைகள் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு பாகத்திற்கும் ஏற்றவாறு அழகிய நேரத்தியும், வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. பெண்களின் உடல் பாகங்களுக்கு ஈடாய் தலையலங்கார நகைகள் நிறைய உருவாக்கப்பட்டுள்ளன. பழங்காலம் தொட்டு பெண்களின் தலையலங்கார நகைகள் கூடுதல் வனப்புடன், ...

Read More »

யாழ்ப்பாணத்திற்கொரு ஆறு (River to Jaffna)

“வானிலிருந்து விழும் ஒரு துளி நீரையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தாது வீணே கடலைச் சென்றடைய விடமாட்டேன்” என்பது, பொலநறுவையை இராசதானியாக கொண்டு ஆட்சி செய்த சிங்கள மன்னன் மகா பராக்கிரமபாகுவின் புகழ் மிக்க கூற்றுக்களில் ஒன்றாகும். பேச்சோடு மட்டும் நின்றுவிடாது, வானிலிருந்து விழும் நன்னீர், கடலைச் சென்றடைவதைத் தடுக்க, பராக்கிரம சமுத்திரம் என்ற மாபெரும் நன்னீரேரியை பராக்கிரம்பாகு கட்டுவித்தான். பராக்கிரம்பாகுவின் காலத்தில் இலங்கைத் தீவு தெற்காசியாவின் தானியக் களஞ்சியமாக திகழ்ந்தது என்பது ...

Read More »

எனது கனவுகளிற்கும் நினைவுகளிற்குமான களம் – வீழமாட்டோம்!

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முன்னேறிக் கொண்டேயிருக்கிறது. 1980களின் இறுதியில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியுடன் சோஷலிஸம் முடிவிற்கு வர, உலகமயமாக்கல் (Globalosation) எனும் முதலாளித்துவ (Captilasm) குதிரையில் ஏறி இந்தியா, சீனா, பிரேஸில், மலேசியா உட்பட பல வளர்ந்துவரும் நாடுகள் பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. 1970களில் யுத்தத்தால் அழிவடைந்த வியட்நாமும் பங்களாதேஷும் கூட இந்த பயணத்தில் இணைந்து பயனடைய தொடங்கி விட்டன. 1977ல் திறக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரத்தால் நன்மையடைய வேண்டிய ...

Read More »

குழந்தைப் பாடல்: பொங்கல் திருநாள்

பொங்கல் திருவிழா வந்தது புதிய மகிழ்வைத் தந்தது சங்கத் தமிழர் பெருமையைத் தரணி புகழச் சொன்னது! உழவர் நாளாய் மலர்ந்தது உழைப்பின் அருமை புரிந்தது மண்ணில் விளைந்த நெல்மணி பானையில் பொங்குது கண்மணி! இல்லம் சிறக்கச் செய்தது இனிப்புப் பொங்கல் ஆனது உள்ளம் தேனாய் இனிக்கவே உறவுப் பொங்கல் ஆனது! சோலை மரங்கள் பூத்தன சொக்கப் பானைகள் எரித்தன பாலும் நெய்யும் சேர்ந்தது பாசப் பொங்கல் இனித்தது!

Read More »