செடில் காவடி- ஏற்பு. எயிட்ஸ்

முதுகில் வலி என்றார்.

என்னவென்று பார்த்போது இவரது முதுகில் இரண்டு நிரையாகக் காயங்கள் இருப்பதைக் கண்டேன். அதில் ஒன்று மிகவும் சீழ் பிடித்திருந்தது.

இவை என்ன காயங்கள் என நினைக்கிறீர்கள்?

தானாகத் தேடிக் கொண்ட காயங்கள்

வலிந்து தேடிய காயங்கள்

ஆயினும் அவரைக் கண்டிக்கவோ பேசவோ முடியவில்லை

எமது பாரம்பரியமும் வழிபாட்டு முறையும் சார்ந்ததைச் செய்த அவரை  எவ்வாறு கண்டிப்பது

காரணம் அது காவடி எடுத்ததால் வந்தது.

காவடி எமது பாரம்பரிய கலை
பல வகைக் காவடிகள் உண்டு
சுந்தாரம்பாள் பாடியது போல பால் காவடி பன்னீர் காவடி புஸ்ப காவடி எனப் பல வகைகள்

ஆயினும் செதில் காவடி பறவைக் காவடி துலாக் காவடி செடில் காவடி போன்றை சற்று ஆபத்தானவையும் கூட.

இவர் ஆடியது சாதாரண காவடி அல்ல
செடில் காவடி.

காவடி ஆட்டம் பார்காதவர்களே எம்மிடையே இருக்க முடியாது

அவரது முதுகில் குத்தப்பட்ட செடில்கள் இதற்கு முன்னர் யாரு யாருக்கெல்லாம் குத்தப்பட்டதோ. யார் யாரது அழுக்குக் கைளைக் கடந்து இவரது முதுகில் ஏறியதோ தெரியாது.

அவ்வாறு எங்கோ இருந்து கிருமி தொற்றி தான்காவடி ஆடியவரின் முதுகில் கிருமி தொற்றிக் கொண்டது.

இன்று இத்தகைய காவடிகள் செடில்  கள் எல்லாமே வாடகைக்கு விடப்படுகின்றன.

காவடி ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போது சில வேளைகளில் வாடகைக்கு விட்டவருக்கு தொலைபேசி அழைப்பு வருமாம் அவசரமாக செடில் வேண்டும் என்று

வாடகைக்hகரன் இங்கு ஒருவரது செடிலைக் கழட்டிக் கொண்டு ஓடுவாராம் புதிய வாடிக்கையாளருக்கு கொடுக்க.

ஒருவரது இரத்தம் படிந்த செடில் எந்தவித சுத்திகர்பபும் இன்றி புதியவருக்கு ஏற்றப்படுமாம்.இந்தத் தகலைத் தந்தது செடில் புண்காரனைக் கூட்டி வந்தவர்தான்.

சாதாரண கருமி மட்டுமல்ல எயிட்ஸ் கூடத் தொற்றலாம்.

எயிட்சை விடுங்கள் ஏற்று நோயும் தொற்றலாம். காலில் முள்ளுக் குத்தினாலே ஏற்பு ஊசி போ வருபவர்களுக்கு இந்த ஊசிகளுக்கும் ஏற்பு வரலாம் எனத் தெரிந்தே இருக்காது

இத்தகைய சுகாதார கேடுகள் பற்றிய எந்வித அக்கறையோ அறிவோ தெளிவோ இன்றி செடில் குத்துவது எவ்வளவு ஆபத்து என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

கடவுளுக்கு செய்கிறோம் அவர் காப்பாற்றுவார்தானே என்று சிலர் சொல்லக் கூடும்.

கடவுள் என ஒருவர் இருந்தால் அவர் எங்களுக்கு ஆறறிவையும் தந்து சுதந்திரமாக செயற்பட விட்டிருக்கறார் என்றுதான் சொல்ல வேண்டும்

உனக்கு விருப்பமானதைச் செய் விளவுகளை நீயே அனுபவத்துக் கொள் என்றுதானே அர்த்தம்.

முதுகு மற்றும் கைகளில் செடில் குத்தி அவற்றில் கயிற்றின் துணை கொண்டு காவடியெடுப்பது, வாய் அலகில் வேல் குற்றுவது, மற்றும் பறவைக் காவடி எடுப்பது என்பனவற்றிக்கும் இத்தகைய ஆபத்துகள் வர வாயப்புண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்

எம்.கே.முருகானந்தன்