பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியாவின் மார்க்கெட் தற்போது சூடு பிடித்திருக்கிறது. ‘களவாணி’படத்தில் தமிழில் அறிமுகமானவர் ஓவியா. அதன்பிறகு சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் பங்கேற்ற ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அவருக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. ஓவியா நடிப்பில் தயாரான ‘சீனி’ என்ற படம் இப்போது ‘ஓவியாவை விட்டா யாரு’ என்று பெயர் மாறி இருக்கிறது. ஓவியா பெயரை தலைப்பில் போட்டால் படம் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என்ற அளவு ...
Read More »திரைமுரசு
ரூபாவின் அதிரடி! நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு!
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டிய டி.ஐ.ஜி. ரூபாவின் அதிரடி, சினிமா படமாகிறது. அதில் ரூபாவாக நடிகை நயன்தாரா, அனுஷ்காவிடம் பேச்சுவாரத்தை நடத்தப்பட இருக்கிறதாம். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரியான ரூபா ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த குற்றச்சாட்டை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் தான் கூறியது உண்மைதான் என்று ...
Read More »மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பினார் ஓவியா!
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா மீண்டும் தனது சமூகவலைத்தளமான ட்விட்டர் பக்கத்திற்கு திரும்பியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் ஓவியா. இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய உடனே, தனது சமூகவலைத்தளத்தில் கூட ட்வீட் எதுவுமே செய்யாமல் ஓய்வில் இருந்தார். கொச்சியிலிருந்தபடியே வீடியோ பதிவு ஒன்றை மட்டும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்நிலையில் ஓவியா மீண்டும் தனது ட்விட்டர் தளத்திற்கு திரும்பியுள்ளார். சமூகவலைத்தளத்தில் பலரும் அவருக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். தனது முதல் டுவிட்டாக, ‘உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து ...
Read More »விஷால் தங்கை திருமணம்!
தயாரிப்பாளர் சங்க தலைவர், நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் அவர்களின் தங்கையும் ஜி.கிருஷ்ணா ரெட்டி – ஜானகி தேவி ஆகியோரின் புதல்வியுமான ஐஸ்வர்யா ரெட்டி மற்றும் உம்மிடி உதய் குமார் – உம்மிடி ஜெயந்தி ஆகியோரின் புதல்வனுமான உம்மிடி க்ரிதிஷ்-ன் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் ...
Read More »இன்று `வேலைக்காரன்’ படத்தின் மாதிரி விருந்து
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள `வேலைக்காரன்’ படத்தில் இருந்து இன்று மாதிரி விருந்து ஒன்று வழங்கப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்’. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது. சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ...
Read More »நாச்சியார் படப்பிடிப்பை முடித்த பாலா
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடித்து வந்த ‘நாச்சியார்’ படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முழுவதுமாக முடிந்துள்ளது. பாலா இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் `நாச்சியார்’. இந்த படத்தில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தில் நடிகை ஜோதிகா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது. சமீபத்தில் ...
Read More »ஸ்டண்ட் யூனியனுக்காக மேடையேறும் காஜல்!
இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியன் கலை நிகழ்ச்சியில் மேடையேறுகிறார். சௌத் இந்தியன் சினி & டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் & ஆர்டிஸ்ட் யூனியனின் பொன் விழா சென்னையில் வருகிற 26ம் தேதியன்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. சுமார் 6.30 மணி நேரம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் மேடையேறுகிறார்கள். இதுவரை எந்த கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்காத காஜல் அகர்வால் முதன் முறையாக நடன நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதைத் தவிர ...
Read More »பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா?: தமன்னா, ஹன்சிகா
புதுமுகங்கள் அதிகமாக வருவதால் பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா? என்பதற்கு நடிகைகள் தமன்னா, ஹன்சிகா ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர். தமன்னாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. தெலுங்கில் இளம் கதாநாயகன் சந்தீப் கிஷனுடன் மட்டும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். பாகுபலி படம் மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் கஷ்டப்பட்டு நடித்து இருந்தார். குதிரை சவாரி, வாள் சண்டை பயிற்சிகளும் எடுத்து நடித்தார். பாகுபலி முதல் பாகத்தில் தமன்னாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. இதனால் உழைப்பெல்லாம் வீணான விரக்தியில் ...
Read More »புயலுக்குப் பின் மெல்லிய காற்று! – சூர்யாவின் இயக்குனர்
புயலான படங்கள் வெளிவந்து ஓய்ந்த பிறகு மெல்லிய காற்று உங்களை வரவேற்கும் என்று சூர்யா வைத்து தற்போது படம் இயக்கி வரும் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார். ‘போடா போடி’, ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் தற்போது சூர்யாவை வைத்து ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் ...
Read More »ஓவியா ஆர்மி: இலங்கை கலைஞர்களின் அசத்தல் பாடல்
பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியாவை ஆதரித்து இலங்கை கலைஞர்கள் உருவாக்கிய பாடல் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ஓவியா. அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையினை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து பாடல் ஒன்றினை வெளியிட்டுள்ளனர். பிரேம் ராஜ் இசையமைப்பில் வெளிவந்துள்ள இந்தப் பாடலை யஜீவன், பிரசாதன் மற்றும் பிரேம்ராஜ் பாடியுள்ளனர். பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை ரமேஸ்காந்த் மற்றும் எஸ்.ஜி.பிரபு பாடியுள்ளனர். பாடலின் வரிகளை பிரவீன் மற்றும் ...
Read More »
Eelamurasu Australia Online News Portal