மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள `வேலைக்காரன்’ படத்தில் இருந்து இன்று மாதிரி விருந்து ஒன்று வழங்கப்படுகிறது.
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் `வேலைக்காரன்’.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா முதன்முறையாக இணைந்திருக்கும் இப்படம் சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகிறது.
சமூக பிரச்சனையை மையமாக வைத்து ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாஷில் வில்லனாக நடித்திருக்கிறார். பிரகாஷ் ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், அனிருத் இசையில் படத்தில் இருந்து சிங்கிள் டிராக் ஒன்று நாளை மறுநாள் (28.8.17) வெளியாகிறது. அந்த சிங்கிள் டிராக்கின் புரோமோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக `வேலைக்காரன்’ படக்குழு அறிவித்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal