எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு. பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த விஜய் சேதுபதியிடம், ‘உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நியாபகம் வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க ...
Read More »திரைமுரசு
பாடகி பி.சுசீலாவுக்கு சென்னையில் பாராட்டு விழா!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் பாடல்கள் பாடி புகழ்பெற்ற பி.சுசீலாவுக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. தனது இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா, தமிழ் உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் ‘பெற்றதாய்’ படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, ...
Read More »ஒரு விருதுகூட வாங்காதது எனக்கு ஒரு குறையாக இருக்கு!
அக்னி தேவி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை மதுபாலா, திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக கூறியிருக்கிறார். ‘அழகன்’, `ரோஜா’, `இருவர்’, `செங்கோட்டை’, `ஜென்டில்மேன்’, `மிஸ்டர் ரோமியோ’ என 90களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர் மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்‘ படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு `அக்னி தேவி’ படத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் ...
Read More »“எனக்குச் சவால் என்றால் ரொம்பப் பிடிக்கும்” – சமந்தா
“எனக்குச் சவால் என்றால் ரொம்பப் பிடிக்கும்” எனும் சமந்தா, ‘சீமராஜா’ படத்துக்காகச் சிலம்பம் சுழற்றினார். ஆனால் “ எனக்கு உண்மையாகவே சவாலாக அமைந்தது எது என்று கேட்டால், அது வேம்பு கதாபாத்திரம்தான்” என்று விரைவில் வெளியாகவிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் தாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் பற்றிப் பேசத் தொடங்கினார். விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க, ’ஆரண்யகாண்டம்’ தியாகராஜன் குமாரராஜா இயக்கம் என எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்றில்லாமல் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த சமந்தா உடனான உரையாடலின் ஒரு பகுதி இது… வேம்பு கதாபாத்திரத்தை ...
Read More »கீர்த்தி சுரேஷூக்கு இரட்டை வேடம்!
முதல் இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ள கீர்த்தி சுரேஷ் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ், தன் முதல் இந்தி படத்துக்கு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதில் அவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்பது புதிய தகவல். கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வசூலைக் குவித்த பாலிவுட் படமான ‘பதாய் ஹோ’வின் இயக்குநர் அமித் ஷர்மா இயக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படம், இந்திய கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராகிமின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ...
Read More »ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்க எதிர்ப்பு!
ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிப்பதற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளனர். கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கையை இணைய தொடராக உருவாக்கி வருகிறார். விஜய் இயக்கும் படமான ‘தலைவி’ படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் அவரது ...
Read More »கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்!
கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் திரைப்படம், தற்போது கன்னட மொழியில் ரீமேக்காக இருக்கிறது. ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது. இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் ...
Read More »இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்! -திரை விமர்சனம்
இளைஞன் கவுதம் (ஹரிஷ் கல் யாண்) சிறுவயதிலேயே தனது தாய், தன்னைவிட்டுப் பிரிந்த கோபத்தில் விட்டேற்றியான வாழ்க்கை நடத்துகிறார். அவருடைய வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள் ஃபேஷன் டிசைனிங் படிக்கும் கல்லூரி மாணவி தாரா (ஷில்பா மஞ்சுநாத்). இருவருக் கும் ஏற்படும் பரஸ்பரப் பழக்கம் காதலாக மாறுகிறது. அதேவேளையில் தாயின் மீதான கவுதமின் கோபம் அவனுக்குள் தீவிரமான உளவியல் பிரச்சினையாக உருக் கொள்கிறது. அனைவரிடமும் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவன், தன் மீது அன்பு செலுத்துபவர் களைத் தனது உடைமையாகப் பாவிக் கிறான். எனவே தாராவை தனது நிரந்தர ...
Read More »பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாகும் கார்த்தி
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேது பதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் என பல நடிப்ப தாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், கார்த்தி நடிப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இப்படத்தில் பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் வேடத்தில் நடிக்கப்போவது விக்ரம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது வந்தியத் தேவன் வேடத்தில் கார்த்தி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்குமே சரித்திர ...
Read More »இசை என்பதே ஏமாற்றுவேலைதான்!-இளையராஜா
ராத்திரியில் பூத்திருக்கும் பாடலையும் மாங்குயிலே பூங்குயிலே பாடலையும் அந்த மெட்டுக்கு இந்தப் பாட்டு இந்த மெட்டுக்கு அந்தப் பாட்டு என்று மாற்றிப் பாடினார் இளையராஜா. இசையே ஏமாற்றுவேலைதான் என்று ரகசியம் உடைத்தார். மாணவிகள் கரவொலி எழுப்பினார்கள். சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பல பாடல்களைப் பாடினார் இளையராஜா. விழாவில், ‘ஜனனி’ பாடலைப் பாடித் தொடங்கினார். அடுத்து மாணவி ஒருவர், ‘தென்றல் வந்து தீண்டும் போது’ பாடலைப் பாடுங்க ஐயா’ என்று கேட்க, ‘அவதாரம்’ ...
Read More »
Eelamurasu Australia Online News Portal