அக்னி தேவி படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை மதுபாலா, திரைப்படத்துறையில் தனக்கு குறை இருப்பதாக கூறியிருக்கிறார்.
‘அழகன்’, `ரோஜா’, `இருவர்’, `செங்கோட்டை’, `ஜென்டில்மேன்’, `மிஸ்டர் ரோமியோ’ என 90களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர் மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்‘ படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு `அக்னி தேவி’ படத்தில் நடித்திருக்கிறார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் கொடுக்க நினைக்கிறேன்.

எத்தனையோ நல்ல படங்கள்ல சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கேன். ஆனால் இதுவரை ஒரு விருதுகூட வாங்காதது எனக்கு ஒரு குறையாக இருக்கு. அந்தக் கேள்வி என்னைத் துரத்தினப்போதான், மீண்டும் நடிக்கலாம் என்று களமிறங்கியிருக்கேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal