திரைமுரசு

விக்னேஷ் சிவனின் கனவும், ரசிகர்களின் அறிவுரையும்!

இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய கனவு பற்றி பதிவிட்ட கருத்துக்கு ரசிகர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள். 2019-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ‘கிரீன் புக்’, ‘ரோமா’, ‘பிளாக் பாந்தர்’ ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளை அள்ளின. இந்த நிலையில் தமிழ் சினிமா இயக்குனரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தனது ஆஸ்கர் கனவை வெளியிட்டு இருக்கிறார். ஆஸ்கர் விருது அரங்கிற்குள் செல்வதற்கான கதவு அருகே நின்றபடி ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன், தனக்கும் ஒருநாள் ...

Read More »

திருநங்கை வேடத்தில் நடித்த ஸ்ரீ பல்லவிக்கு குவியும் பாராட்டு!

சமீபத்தில் வெளியான ‘தாதா 87’ படத்தில் திருநங்கையாக நடித்த ஸ்ரீபல்லவி நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். கலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான “தாதா 87” திரைப்படம் மார்ச் 1 அன்று உலகெங்கும் வெளியானது. பல ருசிகரமான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தில் கதாநாயகி ஸ்ரீ பல்லவி ஒரு திருநங்கை வேடத்தில் நடித்திருந்தது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. மேலும் அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் ...

Read More »

தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு தேவை!

ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – மேகா ஆகாஷ், இந்துஜா நடிப்பில் உருவாகி இருக்கும் பூமராங் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அதர்வா, தமிழ் பேசும் நாயகிகள் தமிழ் சினிமாவுக்கு நிச்சயம் தேவை என்றார். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ...

Read More »

புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க கடும் போட்டி!

புல்வாமா தாக்குதல் சம்பவங்களை சினிமாவாக எடுக்க இந்தி பட உலகில் கடும் போட்டி நிலவியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த சம்பவத்தை இந்தியில் உரி த சர்ஜிகல் ஸ்ட்ரைக் என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 11-ந்தேதி வெளியான இந்த படத்துக்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த பிப்ரவரி 14-ந்தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். புல்வாமா தாக்குதலுக்கு ...

Read More »

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள்!

2011 – 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுகள், சில ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், 2011 முதல் 2018 வரை 8 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை மொத்தமாக அறிவித்துள்ளது தமிழக அரசு. விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: நடிகர்கள் விஜய் சேதுபதி கார்த்தி பிரசன்னா ஆர்.பாண்டியராஜன் சசிகுமார் ஸ்ரீகாந்த் எம்.எஸ்.பாஸ்கர் தம்பி ராமையா சூரி ...

Read More »

யுவன் சங்கர் ராஜா பாராட்டிய பாடல்!

ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் ‘செத்துப்போச்சு மனசு’ பாடலின் மூலம் பிரபலமான பாடலாசிரியர் கருணாகரனை அந்த பாடலுக்காக மம்முட்டி, யுவன் சங்கர் ராஜா பாராட்டியிருக்கிறார்கள். ‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வரும் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?’ என்ற வரி படத்தின் மொத்த கதையையும் தாங்கியுள்ளது என்று மம்முட்டியும், யுவன் சங்கர் ராஜாவும் பாராட்டினார்கள். இந்த பாடலை எழுதிய கருணாகரன் கூறும்போது, ‘7ஜி ரெயின்போ காலனி’ பாடல்கள் என்னை புரட்டிப்போட்டு பாடலாசிரியர் ஆகும் ஆர்வத்தை ...

Read More »

சினிமாவில் மீண்டும் நக்மா!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த நக்மா, சினிமாவில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க வருவதாக தெரிவித்துள்ளார். 1990-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்த நக்மா காங்கிரசில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். நீண்ட காலமாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து நக்மா கூறியதாவது:- “தென்னிந்திய திரையுலகில் எனக்கு நல்ல பெயர் இருந்தது. ரஜினியுடன் நடித்த பாட்ஷா மற்றும் காதலன் உள்ளிட்ட பல படங்கள் தெலுங்கிலும் ...

Read More »

முதல்முறையாக ஒஸ்கர் விருதை தட்டிச் சென்ற மெக்சிகன் திரைப்படம்

ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் 1970களில்,  நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட  8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் கிளியோ எனும் கதாபாத்திரம், கியூரோனின் வீட்டில் பணிபுரிந்த லிபோரியாவின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த கதாப்பாத்திரத்தில் யலிட்சா அபராசியோ எனும் ...

Read More »

ஜெயலலிதா வாழ்க்கைப்படம் – விஜய் இயக்குகிறார்

ஜெயலலிதா வாழ்க்கைப்படத்தை இயக்கும் முயற்சியில் பல்வேறு இயக்குநர்களும் இறங்கியிருக்கும் நிலையில், விஜய் இயக்கும் படத்திற்கு தலைவி என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் இயக்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைப்படம் `தலைவி’ என்ற பெயரில் உருவாகுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகும் அவரது வாழ்க்கைப் படத்தின் தலைப்பு `தலைவி’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படம் பற்றி இயக்குநர் விஜய் பேசும்போது, “தலைவி என்ற தலைப்புக்கு அவரை விட யார் ...

Read More »

ஒஸ்கர் 2019 – விருதுகள் முழு விவரம்!

அமெரிக்காவில் நடைபெற்ற ஒஸ்கர் விருது விழாவில் அகாடமி விருதை வென்ற திரைப்படங்கள், பிரபலங்கள் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. காலை சுமார் 7 ...

Read More »