ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது.
சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 1970களில், நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.

இவ்விருதினை பெற்ற கியூரோன் பேசுகையில், ‘வெளிநாட்டுப் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதோடு, இவற்றை கற்றுக் கொண்டே வளர்ந்தேன். சிட்டிசன் கேன், ஜாஸ், ராஷ்மோன், தி காட்பாதர் மற்றும் ப்ரீத்லேஸ் போன்ற திரைப்படங்கள் எனக்கு உத்வேகமாக இருந்தன. இந்த விருதினை லிபோரியாவிற்கு சமர்ப்பிகிறேன்’ என்றார்.
மேலும் இந்த திரைப்படம் சிறந்த கோல்டன் குளோப், கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான பஃப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.