‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் ‘பேட்ட’. இப்படத்தின் பாடல்கள் இன்று (டிசம்பர் 9) வெளியாகவுள்ளது. பொங்கல் வெளியீடு என்பதால், விளம்பரப் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் எனப் பலர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திலிருந்து வெளியிடப்பட்ட ‘மரண மாஸ்’ மற்றும் ‘உல்லாலா’ ஆகிய பாடல்கள் ...
Read More »திரைமுரசு
பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் 28 ஆண்டுகள் அனுபவித்தது போதும்!
டிவி, மிக்சியை பற்றி பேசுவது மட்டும் அரசியல் இல்லை, நடிகர்களை அரசியல்வாதிகள் மிரட்டுவதை ஏற்க முடியாது என்று விஜய் சேதுபதி கூறினார். விஜய்சேதுபதி 96 படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- கேள்வி:- படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? பதில்:- கதை தான் தேர்வு செய்ய வைக்கிறது. கேட்கும்போதே அது நம்மை ஈர்க்க வேண்டும். எப்படியாவது இந்த படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவேண்டும். அப்படிப்பட்ட கதைகளை தான் தேர்வு செய்கிறேன். ...
Read More »சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதை கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி ...
Read More »வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க ஆசைப்பட்டேன்: நமிதா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று நடிகை நமிதா ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி படத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்துள்ளார். நடிகை நமிதா கடந்த 2016-ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதன் பின்னர் ஜெயலலிதா உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இதனால் நமிதாவின் அரசியல் பிரவேசம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. ஆனாலும் நமிதாவுக்கு ஜெயலலிதா மீதும் அவரது ஆளுமையின் ...
Read More »’96’ ஜானுவுக்கு கிடைத்த அமோக வரவேற்பு!
’96’ படத்தில் சிறுவயது ஜானு கேரக்டருக்கு கிடைத்த அமோக வரவேற்பால், அதில் நடித்த கவுரி கிஷன் மலையாளத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். சி.பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ’96’. காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ராமச்சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ஜானகி தேவி கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்தனர். ஜனகராஜ், பகவதி பெருமாள், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்த இப்படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்தார். ...
Read More »ஒரே படத்தில் 8 முன்னணி நடிகைகள்!
என்.டி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில், மொத்தம் 8 முன்னணி நடிகைகள் நடிக்கின்றனர். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், பிரபல நடிகருமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படமாகிறது. பிரமாண்டமாகத் தயாராகும் இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கிறார். என்.டி.ஆர். பயோபிக்’ எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் நடிக்க வித்யா பாலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ் இயக்கும் இந்தப் படத்தை, நந்தமுரி பாலகிருஷ்ணா, சாய் கோரப்பட்டி, விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். மறைந்த நடிகை ...
Read More »என்ன நடக்குமோ அது நடக்கட்டும்! – எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
இளையராஜா பாடல் காப்புரிமை விவகாரம் குறித்த கேள்விக்கு என்ன நடக்குமோ அது நடக்கட்டும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கச்சேரிகளில் அனுமதி இல்லாமல் தனது பாடல்களை பாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தார். பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளிநாடுகளில் நடந்த கச்சேரிகளில் தனது இசையில் உருவான பாடல்களை பாடுவதை எதிர்த்து அவருக்கு நோட்டீசும் அனுப்பினார். இதனால் இளையராஜாவின் பாடல்களை அவர் பாடவில்லை. ஆனாலும் ஐதராபாத்தில் சமீபத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அளித்த பேட்டியில் கச்சேரிகளில் மீண்டும் இளையராஜா பாடல்களை பாடுவேன் என்றும் இதற்காக அவர் சட்ட நடவடிக்கைகள் எடுத்தாலும் ...
Read More »மூன்று முறை என் பெயரை மாற்றினார்கள்!- இளையராஜா
எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பராம்பரிய தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது இளையராஜாவின் பாடல்கள் பாடியும், ஆடியும் பெண்கள் கலை நிகழ்ச்சிகளை அவர் முன் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்தார். மாணவிகள் கேள்விகளுக்கு இளையராஜா அளித்த பதில்களின் தொகுப்பு: சென்னைக்கு நான் வரும் போது கையில் காசு கிடையாது. காசு இல்லாமல் சென்னைக்குப் போய் என்னப்பா பண்ணுவ என்று அம்மா கேட்டார். இல்லம்மா.. ஏதாவது லைட் மியூசிக்கில் வாசித்து சம்பாதிப்பேன் என்றேன். உடனே ...
Read More »சாதனை படைக்குமா ’லயன் கிங்’ ரீமேக்?
’லயன் கிங்’ – 1994-ஆம் ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படம். ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. கார்ட்டூன் எனப்படுகிற 2டி அனிமேஷன் படமாக வெளியானது. அந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பட்டத்தைப் பெற்றது. 2 ஆஸ்கர்களை வென்றது. நாயகன் சிம்பாவின் நண்பர்கள் டிமொன், பும்பா இருவருக்குமான தனி ரசிகர் பட்டாளம் ஒன்று உருவானது. ’லயன் கிங்’ பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்ஸ் மத்தியில் ஹகுனா மடாடா (ஆப்ரிக்க மொழி வாசகம், ’கவலை இல்லை’ என்று ...
Read More »மன்னிப்பு கேட்க முடியாது!- ஏ.ஆர். முருகதாஸ்
அரசின் நலத்திட்டங்களை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க முடியாது என ஏ.ஆர். முருகதாஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகி ஓடி கொண்டிருக்கிறது. இந்த படத்தில் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன என கூறப்பட்டது. தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. இது அ.தி.மு.க.வினரை கோபம் அடைய செய்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சர்கார் திரைப்படத்தின் பேனர்களையும், ...
Read More »