பிரபல இந்தி நடிகை அலியா பட், வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார். பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. படங்களில் நடிப்பது பற்றி கூறிய அலியாபட்… “ஆண்களுக்கு மட்டும் முதிர்ந்த வயது வரை நடிப்பது போன்ற கதைகளை தயார் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. இளம் வயது என்றால் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதன்பிறகு ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க ...
Read More »திரைமுரசு
போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள்! -காயத்ரி ரகுராம்
போய் உங்கள் வாழ்க்கையைப் பாருங்கள் என்று கிண்டல் செய்தவர்கள் மீது காயத்ரி ரகுராம் கடும் சாடியிருக்கிறார். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறியதிலிருந்தே, சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக அவரை கிண்டல் செய்து வந்தார்கள். இதனால் அவ்வப்போது காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக பதிலடி கொடுத்து வந்தார். இந்நிலையில் ’பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்துள்ள நிலையில் கிண்டல்களும், மீம்களும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனை கடுமையாக சாடி ட்வீட்களை பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். அதில் அவர் கூறியிருப்பதாவது: முகம் காட்டாமல் கிண்டல் செய்பவர்களைப் பார்க்க விரும்புகிறேன். ...
Read More »விலைமாதுவாக நடிக்கும் சதா!
ஜெயம், அந்நியன் படங்களில் நடித்த சதா, தற்போது அப்துல்மஜித் இயக்கும் ‘டார்ச்லைட்’ என்னும் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் பட உலகில் அழுத்தமாக கால் பதிக்கிறார். தற்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் ...
Read More »‘மெர்சல்’ இன்னும் தணிக்கையாகவில்லை!
அது என்னமோ தெரியவில்லை, விஜய்யின் படம் ரிலீஸாகும் போது ஏதாவது ஒரு வகையில் பிரச்னைகளை சந்தித்து கொண்டு இருக்கின்றன. காவலன், துப்பாக்கி, தலைவா, கத்தி, புலி என தொடர்ந்த பிரச்னை இப்போது மெர்சலிலும் தொடர்கிறது. இதுநாள் வரை மெர்சலுக்கு தலைப்பு பஞ்சாயத்து மற்றும் கேளிக்கை வரி தொடர்பான பஞ்சாயத்தால் படம் ரிலீஸாகுமா, ஆகாது என்ற நிலை நீடித்தது. தற்போது அந்த பிரச்னைகள் எல்லாம் தீர்வாகி மெர்சல் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது புதிதாக ஒரு பிரச்னை வந்துள்ளது. மெர்சல் படத்திற்கு தணிக்கை ...
Read More »தமிழ் கற்க ஆர்வமாக இருக்கிறேன்: ஷாலினி பாண்டே
‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருக்கும் ஷாலினி பாண்டே, தமிழ் கற்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் ஷாலினி பாண்டே. இவர், ‘100 பிரசன்ட் காதல்’ என்ற தமிழ் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாகி இருக்கிறார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘100 பிரசன்ட் லவ்’ படத்தின் ரீமேக். ஜி.வி.பிரகாஷ்- ஷாலினி பாண்டே நடிக்கும் ‘100 பிரசன்ட் காதல்’ படத்தை ...
Read More »மீண்டும் தள்ளிப்போன சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’
சுசீந்திரன் இயக்கத்தில் எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளது. சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளது. ஏற்கனவே பலமுறை தள்ளிப்போன இப்படம், நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ...
Read More »`மெர்சல்’ படத்தில் தான் யார் என்பதை தெரிவித்த காஜல் அகர்வால்
`மெர்சல்’ விஜய் ஜோடியாக நடித்துள்ள மூன்று நாயகிகளில் தனது கதாபாத்திரம் என்னவென்பது குறித்து நடிகை காஜல் அகர்வால் மனம் திறந்திருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக உருவாகி வரும் `மெர்சல்’. அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் இருந்து பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்களை ரிலீஸ் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை ...
Read More »100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ் மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘அயங்கரன்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘100% லவ்’ படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் தமிழ் ரீமேக்காக ‘100% காதல்’ ...
Read More »அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் இயக்குவது யார்?
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் யார் இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனரை உறுதி செய்திருக்கிறார் விக்ரம். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. இப்படத்தின் இயக்குனர் யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை ...
Read More »பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும்: நடிகர் விவேக்
பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் தான் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முடியும் என்று நடிகர் விவேக் பேட்டி அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடியில் நடந்த ஒரு விழாவில் நடிகர் விவேக் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ரஜினி, கமல் உள்பட அனைவருமே அரசியலுக்கு வரலாம். ஆனால், மக்கள் ஏற்றுக்கொண்டு வாக்களித்தால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்கள் தங்களது வீடுகளின் அருகே தேங்கி உள்ள தண்ணீரை அகற்றி ...
Read More »
Eelamurasu Australia Online News Portal