தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் யார் இயக்க போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தனது சமூக வலைத்தளத்தில் இயக்குனரை உறுதி செய்திருக்கிறார் விக்ரம்.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தமிழ் மற்றும் மலையாள ரீமேக் உரிமைகளை இ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது.
இப்படத்தின் இயக்குனர் யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தை யார் இயக்க போகிறார் என்று கேள்வி எழுந்தது. இதில் பாலா, ஏ.எல்.விஜய், விக்னேஷ் சிவன், அல்போன்ஸ் புத்திரன் ஆகிய பெயர்கள் இடம் பெற்றது. கடைசியாக இப்படத்தை பாலா இயக்குவதாக விக்ரம் தனது சமூக வலைதளத்தில் உறுதி செய்தார்.
இயக்குனர் பாலா, விக்ரமை வைத்து ‘சேது’, ‘பிதாமகன்’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது ஜி.வி.பிரகாஷ், ஜோதிகாவை வைத்து ‘நாச்சியார்’ படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. விரைவில் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் வேலைகளை ஆரம்பிக்க இருக்கிறார் இயக்குனர் பாலா.