பிரபல இந்தி நடிகை அலியா பட், வயதான பிறகு நடிகைகளுக்கு சினிமாவில் மரியாதை இல்லை என்று கூறியிருக்கிறார்.
பிரபல இந்தி பட இயக்குனர் மகேஷ்பட் மகள் அலியாபட். இவர் நடித்த பல படங்கள் விருதுகளை பெற்றுள்ளன. இவருக்கும் பல விருதுகள் கிடைத்துள்ளன. படங்களில் நடிப்பது பற்றி கூறிய அலியாபட்…
“ஆண்களுக்கு மட்டும் முதிர்ந்த வயது வரை நடிப்பது போன்ற கதைகளை தயார் செய்து கொடுக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி அல்ல. இளம் வயது என்றால் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதன்பிறகு ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். நடிகைகளுக்காக வித்தியாசமான கதைகளை தயாரிப்பது இல்லை. வித்தியாசமான முயற்சிகளை நமது இயக்குனர்கள் செய்வதும் இல்லை.

இதனால் நடிகைகள் ஒரு சில ஆண்டுகளிலேயே சினிமாவில் இருந்து விலக வேண்டியது இருக்கிறது. எனக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் 90 வயதுவரை நடிப்பேன்” என்கிறார்.
Eelamurasu Australia Online News Portal