சுசீந்திரன் இயக்கத்தில் எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போயுள்ளது.
ஏற்கனவே பலமுறை தள்ளிப்போன இப்படம், நவம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் மேலும் ஒரு வாரம் தள்ளிப்போய் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என்று அறிக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாக இருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹரீன் பிர்சாடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
Eelamurasu Australia Online News Portal