அவுஸ்திரேலியமுரசு

ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி ராஜினாமா

ஆஸ்திரேலியாவில் அரசு பிறப்பித்திருந்த சமூக இடைவெளியை பின்பற்றாத டிரேவர் வாட்ஸ் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் டிரேவர் வாட்ஸ். (பிரதான எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கப்படும் மந்திரி அந்தஸ்து நிழல் மந்திரி எனப்படும்) இவர், தேசிய விடுதலை கட்சியை சேர்ந்தவர். டிரேவர் வாட்ஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சட்டமன்ற தொகுதியான வடக்கு டூம்பாவோ நகரின் விரைவு வழிச்சாலையில் போக்குவரத்து காவல் துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். ...

Read More »

பிரியா நடேசன் – 2 இலட்சம் டொலர்கள் வழக்கு செலவு செலுத்த அரசுக்கு உத்தரவு!!

அவுஸ்திரேலியா அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு 2 இலட்சம் டொலர்களை  வழக்கு செலவாக செலுத்தவேண்டும் என, அந்நாட்டு அரசுக்கு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. பிரியா மற்றும் நடேசன் முருகப்பன் ஆகியவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போரில் இருந்து பாதுகாப்புத் தேடி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அங்கு அவர்களுக்கு கோபிகா மற்றும் தருணிகா ஆகிய இரு குழந்தைகளும் பிறந்திருந்தன. எனினும் அவர்களின் புகலிடத் தஞ்சத்தை நிராகரித்த அவுஸ்திரேலியா அரசு அவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி நாடுகடத்த திட்டமிட்டிந்தது. இந்த நிலையில் அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ...

Read More »

இன வன்முறைக்கு ஆஸ்திரேலியாவில் இடமில்லை!

மலேசியா, சிங்கப்பூரைச் சேர்ந்த இரு மாணவியர்களுக்கு எதிராக இனரீதியாக தூண்டப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஆஸ்திரேலியப்பெண்களுக்கு எதிராக விரைவான நடவடிக்கை எடுத்ததற்காக ஆஸ்திரேலிய அதிகாரிகளை மலேசிய சீனர் சங்கம் பாராட்டியது. ம.சீ.ச. பொதுச்செயலாளர் டத்தோ சோங் சின் வூன், அதிகாரிகள் விரைவில் பெரிய குற்றவாளியைக் கண்டுபிடித்து கைது செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் கோவிட் -19 ஐ பரப்புவதற்கு ஆசியர்கள்தான் காரணம் என்ற தவ்றான புரிதலில் இனவெறி தாக்குதல் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தவறான புரிதலால் ,மலேசிய, சிங்கப்பூர் இளங்கலை பட்டதாரிகள் இருவரை ...

Read More »

கொரோனா தாக்கம்: ஆஸ்திரேலியாவில் பரிதவிக்கும் அகதிகள்!

ஆஸ்திரேலியாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு, அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களின் வாழ்வை கடுமையாக பாதித்திருக்கின்றது. அகதிகள் சார்ந்து இயங்கும் தொண்டு அமைப்பிடம் உதவிக்கோரி வரும் தொலைப்பேசி அழைப்புகள் ஆறு மடங்கு அதிகரித்திருப்பதன் மூலம் தற்போதைய நிலைமை மோசமடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவில்(Bridging Visas) உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும் விரைவில் அவர்கள் வீடற்றவர்களாக மாறக்கூடும் எனக் கூறப்படுகின்றது. “ஒரு நாளைக்கு 40- 60 அழைப்புகள் எங்களுக்கு வருகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்தவர்கள்,” எனக் ...

Read More »

இருமல், மூச்சு திணறல் உள்ள ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

மூச்சு திணறல், தொடர் இருமல், போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். மூச்சு திணறல், தொடர் இருமல், போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது. மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள ...

Read More »

மனிதாபிமான ரீதியில் அனுமதி வழங்கியது அவுஸ்திரேலியா!

அமெரிக்காவில் உயிரிழந்த மகனின் உடலை பார்க்க முடியாமல் தவித்த தாய் அமெரிக்காவில் உயிரிழந்த 20 வயது மகனின் இறுதிசடங்கில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டிற்கு செல்வதற்கான அனுமதியை மனிதாபிமான அடிப்படையில் அவுஸ்திரேலியா வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் சிக்குண்டுள்ள தாயார் உருக்கமான வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்காவில் கடந்தவாரம் இராணுவபயிற்சியின் போது திடீர்என மரணித்த லியோன் சியுபொலி என்ற இளைஞனின் தாயாரே இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். அமெரிக்க இராணுவத்தில் ஒரு வருடத்திற்கு முன்னர் இணைந்துகொண்ட லியோன் வோசிங்டனில் 12 ம் திகதி உயிரிழந்துள்ளார். அவரது தாயாரும் ...

Read More »

மீண்டும் வார்னர், ஸ்மித்: வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா

ஆஸ்திரேலிய அணிக்கு மீண்டும் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் திரும்பியுள்ளதால் வித்தியாசமான தொடராக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா. ந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளைாடும்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக விளையாடாமல் இருந்தனர். நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றியது. இந்நிலையில் வருகிற டிசம்பர்-ஜனவரியில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் ...

Read More »

சூப்பர் மார்க்கெட் வேலைக்குச் செல்லும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டின் ஸ்டா.ஃப்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 80 சதவீத ஸ்டாஃப்கள் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சகஜ நிலை உருவாகி கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகக்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது. இதனால் ஸ்டாஃப்கள் வேலை இல்லாமல் ...

Read More »

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போகிறது

கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரை ஒத்திவைக்கும் முடிவில் இங்கிலாந்து உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்தில் மே 28-ந்தேதி வரை எந்தவிதமான விளையாட்டு போட்டிளும் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ரசிகர்கள் மைதானத்திற்கு வர நீண்ட காலமாகும் என அஞ்சப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடந்த மாதம் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றிருந்தது. ஆனால் கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக பயிற்சி ஆட்டத்தை பாதிலேயே நிறுத்திக் கொண்டு சொந்த நாடு ...

Read More »

ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளது: மார்க் டெய்லர்

கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆறுமாத காலத்திற்கு சர்வதேச எல்லையை மூடியுள்ளது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. கிரிக்கெட் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் வேலை செய்யும் ஸ்டாஃப்களுக்கு ஜூன் மாதம் ...

Read More »