பிரியா நடேசன் – 2 இலட்சம் டொலர்கள் வழக்கு செலவு செலுத்த அரசுக்கு உத்தரவு!!

அவுஸ்திரேலியா அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்திற்கு 2 இலட்சம் டொலர்களை  வழக்கு செலவாக செலுத்தவேண்டும் என, அந்நாட்டு அரசுக்கு, நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பிரியா மற்றும் நடேசன் முருகப்பன் ஆகியவர்கள் சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்போரில் இருந்து பாதுகாப்புத் தேடி அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்தனர். அங்கு அவர்களுக்கு கோபிகா மற்றும் தருணிகா ஆகிய இரு குழந்தைகளும் பிறந்திருந்தன.

எனினும் அவர்களின் புகலிடத் தஞ்சத்தை நிராகரித்த அவுஸ்திரேலியா அரசு அவர்களை தடுப்பு முகாமுக்கு அனுப்பி நாடுகடத்த திட்டமிட்டிந்தது.

இந்த நிலையில் அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களின் வழக்கு செலவு இழப்பீடாக 200,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. தருணிக்காவுக்கான பாதுகாப்பு தொடர்பில் பெற்றோருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.