அவுஸ்திரேலியமுரசு

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடியவர்களை கேலி செய்த நபர்!

அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நான்கு காவல் துறை அதிகாரிகளை காப்பாற்றாமல் கேலி செய்த நபர் தற்போது விசாரணை எதிர்கொள்கிறார். அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் மாத இறுதியில் இந்த கொடூர சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் கொண்ட ஒரு காவல் துறை குழு, அசுர வேகத்தில் பறந்த ஒரு போர்ஷே வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர். விசாரணையில் 41 வயதான Richard Pusey என்ற அந்த நபர் அதிகமான போதைமருந்தும் உட்கொண்டிருந்தது ...

Read More »

கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது!

சிறிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிப்பதுடன் வர்த்தகங்களை மீண்டும் செயல்பட வைக்கும் வகையில் அந்நாட்டு அரசின் மூன்று கட்ட திட்டத்தின்படி உணவகங்களையும் திறக்க சிறிய மாநிலங்கள் அனுமதித்தன. கிட்டத்தட்ட 1 மில்லியன் பேர் மீண்டும் வேலைக்குச் செல்ல வழிவகுக்கும் மூன்று கட்ட செயல்முறையை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார். கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது. தினமும் 20க்கும் குறைவானோருக்கே நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அந்நாட்டில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது. தலைநகர் கேன்பரா உட்பட சில மாநிலங்களில் நேற்று முதல் ...

Read More »

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி – இயான் சேப்பல் பாராட்டு

உலகின் சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் இயான் சேப்பல் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இந்த தொடர் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கும். கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் ஸ்டீவன் சுமித்தும், டேவிட் வார்னரும் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த ...

Read More »

பிரான்சில் திங்கட்கிழமை ஊரடங்கை விலக்க முடிவு

பிரான்ஸ் நாட்டில் வருகிற திங்கட்கிழமை ஊரடங்கை விலக்கி கொள்ளப் போவதாக அந்நாட்டு பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 174,791 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுவரை 25,987 பேர் உயிரிழந்துள்ளனர். வைரசை கட்டுப்படுத்த மார்ச் 17-ம் திகதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது வைரஸ் தாக்கம் குறையத் தொடங்கி உள்ளது. நேற்று 178 பேர் மரணம் அடைந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் 3000-க்கும் குறைவான நோயாளிகளே உள்ளனர். கொரோனா ...

Read More »

கொழும்பில் இருந்து மெல்போர்ன் நோக்கி பறக்கும் விமானம்!

அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன் வானுர்தி சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று இன்று அதிகாலை அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வானுர்தி இன்றைய தினம் மெல்போர்ன் நகரை சென்றடையவுள்ளது.  இதற்கமைய கற்றல் செயற்பாடுகளுக்காக சென்று அங்கு நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனனர். இதேவேளை, அத்தியாவசிய சுகாதார உபகரணங்கள் அடங்கிய சீனாவின் மூன்றாவது வானுர்தி இன்று நாட்டை வந்தடையவுள்ளது. கொழும்பிலுள்ள சீனா தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. 30 ஆயிரம் பி.சீ.ஆர் பரிசோதனை கட்டமைப்புக்கள், 15 ஆயிரம் பிரத்தியேக பாதுகாப்பு ஆடைகள், ...

Read More »

ஆஸ்திரேலியாவில் நிரந்தர விசாவைப் பெற முடியுமா?

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, ஆஸ்திரேலியாவில் உள்ள பல வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தற்காலிகமாக புலம்பெயர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்க விண்ணப்பிப்பதற்கான ஆங்கிலத் தேர்வுகளை எழுதுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் பணியாற்றுவதற்கான அபிமன்யூ சிங்கின் நீண்ட கால விசா மே 18ம் திகதியுடன் நிறைவடையிருக்கும் நிலையில், விசா காலம் நிறைவடையும் முன்னர் நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், நிரந்தர விசாவுக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத் தேர்வின் முடிவுகளை விசா விண்ணப்பத்துடன் ‘அபிமன்யூ’ சமர்பிக்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள இச்சூழலில், PTE (Pearson ...

Read More »

ஆஸ்திரேலிய தொடர் ரத்தானால் பேரிழப்பு ஏற்படும்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய போட்டி தொடர் நடக்காமல் போனால் பேரிழப்பு ஏற்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் லபுஸ் சேன் தெரிவித்தார். உலகையே நிலைகுலைய வைத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 13-ந் தேதிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவை பொறுத்தமட்டில் செப்டம்பர் 30-ந் தேதி வரை அந்த நாட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற ...

Read More »

கொரோனா அச்சத்திலும் அகதியை சீண்டும் அவுஸ்ரேலியா!

ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் இருந்த குர்து அகதி ஒருவர், தடுப்பு நிலைமைகளை முன்னேற்றும்படி போராட்டம் நடத்தியதற்காக வழக்கமான தடுப்பு மையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சியில் ஈடுபட்ட பர்ஹத் பந்தேஷ் எனும் அந்த அகதி, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் ஆறு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு, உடல் மற்றும் மனநல சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இவர், மெல்பேர்னில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த ஹோட்டல், தடுப்பிற்கான மாற்று இடமாக ...

Read More »

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து !

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்ட காவல் துறை தாக்குதல் நடத்திய நபரை கொன்றனர். ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிகவளாகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். ...

Read More »

ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியது ஆஸ்திரேலியா

வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஆறு வீரர்களை அதிரடியாக நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு. ஆஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது. அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா ...

Read More »