சிறிய அளவிலான ஒன்றுகூடல்களை அனுமதிப்பதுடன் வர்த்தகங்களை மீண்டும் செயல்பட வைக்கும் வகையில் அந்நாட்டு அரசின் மூன்று கட்ட திட்டத்தின்படி உணவகங்களையும் திறக்க சிறிய மாநிலங்கள் அனுமதித்தன.
கிட்டத்தட்ட 1 மில்லியன் பேர் மீண்டும் வேலைக்குச் செல்ல வழிவகுக்கும் மூன்று கட்ட செயல்முறையை பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார்.
கொவிட்-19 நோய்த்தொற்றை ஆஸ்திரேலியா வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி வருகிறது.
தினமும் 20க்கும் குறைவானோருக்கே நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அந்நாட்டில் பதிவான மொத்த மரணங்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது.
தலைநகர் கேன்பரா உட்பட சில மாநிலங்களில் நேற்று முதல் மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். 10 பேருக்குள் அடங்கிய ஒன்றுகூடல்களும் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உணவகங்களில் 10 பேர் வரை உணவருந்தலாம்.
Eelamurasu Australia Online News Portal