ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நிகழ்த்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரை மீட்ட காவல் துறை தாக்குதல் நடத்திய நபரை கொன்றனர்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பாரா பிராந்தியத்தின் தெற்கு ஹெட்லாண்ட் நகரில் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிகவளாகத்தில் திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் பொருட்கள் வாங்கி கொண்டிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
இதனால் மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும், 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதுகுறித்த அறிந்ததும் அங்கு சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதனை தொடர்ந்து, தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் காவல் துறை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Eelamurasu Australia Online News Portal