அவுஸ்திரேலியமுரசு

ஜூலை 19ம் திகதி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டம் !

ஆஸ்திரேலியாவைப் படகு வழியாக அடைய முயன்ற அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள், கடல் கடந்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு 7 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்ற அகதிகளை விடுவிக்கக்கோரி வரும் ஜூலை 19ம் திகதி ஆஸ்திரேலியாவின் பல இடங்களில் போராட்டம் நடைபெற இருக்கின்றது. ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயல்பவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள், அவர்கள் கடல் கடந்த தடுப்பு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் எனும் கொள்கையினை 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்திருந்தார் . ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூட். அதன்படி, இன்று வரையிலும் நூற்றுக்கணக்கான அகதிகள் ...

Read More »

ஹாங்காங் மக்கள் 10 ஆயிரம் பேருக்கு நிரந்தர குடியுரிமை: ஆஸ்திரேலியா அரசு முடிவு

ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதாகவும், இதன் மூலம் அவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஸ்காட் மாரிசன் தற்போது தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, சீனா ஹாங்காங்குக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராக பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை, தேசத் துரோக குற்றச்சாட்டில் கைது செய்யலாம். சீனாவின் இந்த புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹாங்காங் மக்களுக்கு அடைக்கலம் ...

Read More »

ஆஸ்திரேலியாவின் புலம்பெயர்விலும் முழுமையான வீழ்ச்சி

கொரோனா பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட எல்லை மூடல் நடவடிக்கையினால், 2019 வரவு செலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட புலம்பெயர்வு எண்ணிக்கையை எட்டுவது சாத்தியமற்றதாகியுள்ளது என ஒரு குடியேற்ற வல்லுநர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியர்கள் அல்லாதவர்கள், நிரந்தரமாக வசிக்கும் உரிமைப் பெறாதவர்களுக்கு ஆஸ்திரேலிய எல்லை மூடப்படுவதாக கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்திருந்தார். இந்த தொடர் கட்டுப்பாட்டின் காரணமாக ஆஸ்திரேலியாவின் அனைத்து விதமான புலம்பெயர்விலும் முழுமையான வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த மே மாதம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ...

Read More »

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில் உள்ள 30க்கும் மேற்பட்ட நியூசிலாந்துவாசிகளில் ஒருவரான Raymond Elise, ஜூன் 18ம் திகதியோ அல்லது அதை ஒட்டிய நாளிலோ நாடுகடத்தப்படுவோம் எனக் கூறப்பட்டதாகவும் ஆனால் கொரோனா சூழல் நாடுகடத்தலை தாமதப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். இதனால் தாங்கள் எப்போது நியூசிலாந்துக்கு அனுப்பப்படுவோம் என்று அறிய முடியாத நிலையில் இவர்கள் தடுப்பு முகாமில் இருக்கின்றனர். நியூசிலாந்து அரசு இந்த ...

Read More »

அந்த படகு வீட்டில் ஒவ்வொரு இரவும் நரகமாகவே இருந்தது: சித்திரவதைக்கு உள்ளான அவுஸ்திரேலிய இளம்பெண்!

அவுஸ்திரேலியரான இளம்பெண் இமயமலை செல்லும் வழியில் கடத்தப்பட்டு, இரண்டு மாத காலம் சித்திரவதைக்கு உள்ளான சம்பவத்தை அவரே தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியரான கார்மென் கிரீன்ரீ என்பவர் தமது 22 ஆம் வயதில் தலாய் லாமாவின் கீழ் படிக்க இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டார். தற்போது 37 வயதாகும் கார்மென் கிரீன்ரீ கடந்த 2004 ஆம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட அந்த கொடூர சம்பவத்தை தற்போது ஒரு புத்தகமாக தொகுத்துள்ளார். கார்மென் தமது இளைமை காலத்தில் கடல் அலை மீது சாகசம் செய்யும் ஒரு வீராங்கனையாக ...

Read More »

எவரும் வெளியேற முடியாது… கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த விக்டோரியா நிர்வாகம்

அவுஸ்திரியாவில் பொதுமக்களுக்கான 9 குடியிருப்பு வளாகங்களில் முழு ஊரடங்கை அமுலுக்கு கொண்டு வந்துள்ளது விக்டோரியா மாகாண நிர்வாகம்.  சனிக்கிழமை விக்டோரியா மாகாணத்தில் 108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்தே மாகாண நிர்வாகம் இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளது. 108 பேருக்கு ஒரே நாளில் தொற்று என்பது இரண்டாவது மிக அதிக பாதிப்பு எண்ணிக்கை என கூறப்படுகிறது. இதனால் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள பொதுமக்களுக்கான 9 குடியிருப்பு வளாகங்களை கடுமையான கட்டுப்பாடுக்ளுடன் முழு ஊரடங்கிற்கு மாகாண நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. மட்டுமின்றி ...

Read More »

மெல்போர்ன் நகரில் மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு

மெல்போர்ன் நகரில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், மீண்டும் 6 வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன்பின் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தது. ஆஸ்திரேலியாவில் 9 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று குறைய ஆரம்பித்ததால் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் மெல்போர்ன் நகரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் விக்டோரியா மாநில முதல்வர் 6 வாரத்திற்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ...

Read More »

ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது

வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் ஐசிசி கூட்டத்தில் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பது குறித்து அகாரிகப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற அக்டோபர் மாதம் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் மாதம் 15-ந்தேதி வரை நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு முறை ஐசிசி இதுகுறித்து முடிவு எடுக்க முடியாமல் அதிகாரப்பூர்வ அறிப்பை ஒத்தி வைத்தது. இதற்கிடையில் தற்போதுள்ள சூழ்நிலையில் டி20 ...

Read More »

அடைக்கலம் வழங்க அவுஸ்திரேலிய அரசு பரிசீலனை!

சீன அரசின் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் ஹொங்கொங் மக்களுக்கு அடைக்கலம் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசன் (Scott Morrison) தெரிவித்துள்ளார். சீன அரசானது ஹொங்கொங்கிற்கெதிரான தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இச் சட்டத்தின் மூலம் பிரிவினைக்கு குரல் கொடுப்போர், சீனாவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வோர் உள்ளிட்டோரை தேசத் துரோகக் குற்றச்சாட்டில் கைது செய்யவும் சீனாவுக்கு நாடு கடத்தவும் முடியும். இச் சட்டத்தை எதிர்த்து, ஹொங்கொங்கில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதோடு சீன அரசினுடைய இந் நடவடிக்கைகளுக்கு உலக தலைவர்கள் தொடர்ந்து ...

Read More »

ஆஸ்திரேலியாவில் உணவிற்கான உதவிகளை நம்பி 14 லட்சம் மக்கள்

கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள மந்தநிலையினால், உணவிற்கான உதவிகளை நம்பியிருக்கும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்துள்ளது. இன்றைய சூழலில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் மக்கள் உணவிற்கான உதவிகளைப் பெறுகின்றனர். இதுவே பெருந்தொற்று சூழலுக்கு முன்னதாக சுமார் 8 லட்சம் மக்களே இந்த உதவிகளைப் பெற்றுள்ளனர். பெருந்தொற்று சூழலினால், உணவு உதவிகள் தேவைப்படுவோரின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான ஆஸ்திரேலிய செனட் குழுவிடம் கூறியுள்ளார் ஆஸ்திரேலிய உணவு வங்கியின் தலைமை நிர்வாகி Brianna Casey. வெளிநாட்டு மாணவர்கள், தற்காலிக விசா கொண்டிருப்பவர்கள், ...

Read More »